Song Category: Tamil

Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragaamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)

3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது

Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2

2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2

3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2

4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paduven Nathan

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே

3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே

4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று

Peruga Panuven Enru
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்

3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

Puviaalum Mannavan
புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

Potri Paadukindren – போற்றி பாடுகின்றேன்

Potri Paadukindren

போற்றி பாடுகின்றேன் நான் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

மகிமை செலுத்துகிறேன் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

Potri Paadugindraen Naan… Deva
Undhan Naamathi… Deva
Undhan Naamamae Uyarndha Naamamae
Magimai Seluthugiraen Deva
Undhan Naamathai Deva
Undhan Naamamae Uyarndha Naamamae

Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல்

Unthan Naamam Menmai
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே

நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே

Ekkala Satham Vaanil

Ekkala Satham Vaanil
பல்லவி

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

சரணங்கள்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

Seer Yesu Nathanukku

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Ennai Anantha Thailathal – என்னை ஆனந்த தைலத்தால்

Ennai Anantha Thailathal

என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

Ennai Anantha Thailathal
Abishaegam Seithedum Aaviyanavarae – (4)

Aaviyanavarae Anbin Aaviyanavarae – (4)

1. Varanda Nilangal Vayalveli
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

2. Ularntha Yelumpugal
Uyirodezhumpattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai