Song Tags: CBC 2018 Songs

Zoom Zoom Zoom – சும் சும் சும்

Zoom Zoom Zoom

Zoom zoom zoom (4)
கண்ணு நல்லா தெரியணுமா ?
நீ கேரட் சாப்பிடனும்- உன்
Hand writing அழகா இருக்கனுமா?
நீ எழுதி பழகணும் (2)

உன் வாழ்க்கை நன்றாய் இருக்கணுமா?
நீ ஒழுங்காய் நடந்துக்கணும்
மோட்சம் போகணுமா?
நீ இயேசுவை ஏத்துக்கணும் (2)

Pam Pam Chiku Buku – பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு

Pam Pam Chiku Buku
பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)
சிக்கு புக்கு இரயிலில் பயணம் போகிறோம் (லலலலா 2)
இது மோட்சம் போகும் இரயிலு தானே (லலலலா 2)
பாவமும் பயமும் கொஞ்சமும் இல்லை லலலலா
இயேசப்பா நம்மோடு வந்திடுவாரே (லலலலா 2)

தங்க கிரிடம் அணிந்திடுவோமே (லலலலா 2)
தங்க ரோட்டில் நடந்திடுவோமே (லலலலா 2)
நித்திய காலமாய் வாழ்ந்திடுவோமே லலலலா
இயேசப்பாவோடு வாழ்ந்திடுவோமே (லலலலா 2)

பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)

Pathu Onbathu Yetu – 10, 9, 8 கைகளை

Pathu Onbathu Yetu
10, 9, 8 – கைகளை நீயும் தட்டு
7, 6, 5 – வாழ்ந்திடாதே பயந்து
4,3,2 – இயேசு உன்னோடு உண்டு
1 ஆம் நம்பர் தானே ரொம்ப முக்கியம்
நம்பர் 1 ஆக நீயும் வாழ பழகணும்

படிப்பிலும், Games சிலும் நம்பர் 1
ஜெபத்திலும், குணத்திலும் நம்பர் 1

Vendume Vendume Gnanam – வேண்டுமே வேண்டுமே ஞானம்

Vendume Vendume Gnanam
வேண்டுமே (2) ஞானம் வேண்டுமே
ஞானமற்றவள் / ஞானமற்றவன் நான் (2)
ஞானம் தாருமே – எனக்கு (2)
கடிந்து கொள்ளாத தேவன் நீரல்லோ
எனக்கு ஞானம் தந்தடுமே
சம்பூரணமாக தந்திடுமே (2)

Kethu Kethu Kethu – கெத்து கெத்து கெத்து

Kethu Kethu Kethu
கெத்து (4) கெத்து தானடா – நீ
மொக்க (4) மொக்க இல்லடா

Last ஆக இருக்கேனு கவலைப்ட்டாத – உன்ன
First ஆக மாத்துவாரே இயேசு இயேசு

Worst ஆக படிக்கிறேனு வருத்தப்படாதே – உன்ன
Best ஆக உயர்த்தும் இயேசு உண்டு உண்டு

நம்பு நம்பு இயேசுவை நம்பு நம்பு
தெம்பு தெம்பு உனக்கு வந்திடும் தெம்பு (2)

சிறியவனை தூசியிலிருந்து தூக்கிவிடுவார்
எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி விடுவார் – நம்பு

Iyalesa Iyalesa Iyalesa – ஐலேசா ஐலேசா ஐலேசா

Iyalesa Iyalesa Iyalesa
ஐலேசா – (8)
படகு ஒன்னு போனதம்மா நடுக்கடலிலே
12 சீடர்களும் அந்த படகிலே (2)

எதிர்காற்றடித்தது நடுக்கடலினிலே
அலைகளும் மோதியது படகின் மீதிலே (2)

நடந்து வந்தார் இயேசு கடலின் மீதிலே
சீடர்களும் பயந்தனர் நாலாம் ஜாமத்திலே (2)

பேதுருவும் கடலில் நடந்தார் நம்பிக்கையாலே
சீடர்களும் கரைசேர்ந்தனர் இயேசுவினாலே (2)

Paapap Pam Pam – பாபப்ப பம் பம் பாப

Paapap Pam Pam
பாபப்ப பம் பம் பாப பம் (4)
1, 2, 3 இல்லை இல்லையே
4, 5, 6 இல்லை இல்லையே
7 பேரும் இல்ல இல்லையே
8 வது சிறுவனை தெரிந்து கொண்டார்- குட்டி

தாவீதை கர்த்தர் தெரிந்து கொண்டார்
பாபப்ப பம் பம் பாப பம் (4)
உயரமோ வாட்டமோ இல்ல இல்லையே
6 pack, 8 pack இல்ல இல்லையே (2)

வாயில் கர்த்தரை துதிக்கும் பாட்டுத்தான்
இதயமோ கர்த்தருக்கு ரொம்ப பிடிக்கும்
தாவீதின் இதயமோ கர்த்தருக்கு ரொம்ப பிடிக்கும்
பாபப்ப பம் பம் பாப பம் (4)

Naan Onu Sonna Nee – நான் ஒன்னு சொன்னா

Naan Onu Sonna Nee
நான் ஒன்னு சொன்னா
நீ ஒன்னு செய்கிற
இது பெற்றோரின் புலம்பலடா / புலம்பலம்மா
இதுக்கு காரணமே நீ தானடா / நீ தானம்மா (2)

ஞானமுள்ள மகன் / மகள் தன் பெற்றோருக்கு
சந்தோஷத்தை கொடுப்பானடா / கொடுப்பாளம்மா
இது வேதம் சொல்லும் சத்தியமடா / சத்தியமம்மா
இதுக்கு கிழப்படிந்தால் ஞானம் பெருகும்டா/ பெருகும்மா

ஞானமுள்ள மகன் / மகள் தன் பெற்றோர்களின்
போதகத்தை கேட்பானடா / கேட்பாளம்மா
இது வேதம் சொல்லும் சத்தியமடா / சத்தியமம்மா
இதுக்கு கிழப்படிந்தால் ஞானம் பெருகும்டா/ பெருகும்மா

Uthari Uthari Uthari Uthari – உதறி உதறி உதறி உதறி

Uthari Uthari Uthari Uthari
உதறி (4) உதறி தள்ளு (4)
உலக சுத்தம் கேட்குதே
பாவம் செய்ய தூண்டுதே
சுத்தி சுத்தி வருகிறானே சிந்தையிலே- சாத்தான்
சுத்தி சுத்தி வருகிறானே பார்வையிலே – உன்னை
சுத்தி சுத்தி வருகிறானே பேச்சினிலே
சுத்தி சுத்தி வருகிறானே செய்கையிலே – உதறி தள்ளு

பரிசுத்தமாய் வாழதான் ஆசையே
கிறிஸ்துவுக்காய் வாழ நானும் ரெடியே
ஜெயம் தாருமே சாத்தான் மேலே
தினந்தோறும் ஜெயிக்க பெலன் தாருமே

Mae Mae Mae – மே மே மே மே

Mae Mae Mae
மே மே மே மே (2)
குட்டி சுட்டி ஆட்டுக்குட்டி நான் தானே
இயேசப்பாவின் செல்லக்குட்டி நான் தானே
பாதை மாறி போனேன் என்னை தேடி வந்தார்
தோளில் தூக்கி வைத்தார் ஆனந்தமே கொண்டார்
ஆஹா ஆஹா துள்ளி ஆடிடுவேன்
இயேசப்பாவின் பிள்ளையாய் வாழ்ந்திடுவேன்