Song Tags: John Jebaraj Songs

Indam Kollamal Perugaseiyum – இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் – Seerpaduthuvaar

Indam Kollamal Perugaseiyum

இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்

1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்

2. மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்

 

Asaathiyangal Saathiyame – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyame

அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உந்தன் வார்த்தையாலே – 2
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2

எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே

எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2

1. நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துணைநின்று காப்பவரே – 2

2. என் கை மீறி போனதெல்லாம்
உம் கரத்தால் சாத்தியமே – 2
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே – 2

3. பரிந்துரைகள் செய்யாததை
பரன்கிருபை செய்திடுதே – 2
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே – 2

Asaathiyangal saathiyame
Devaa Unga Vaarthayaalae – 2
Asayaadha Malaikooda Asaindhidumae
Amaraadha Puyalkooda Amarndhidumae – 2

Ella Pugazhum Ella Ganamum
Ennil Asaathiyam Seibavarkae
Ella Thudhiyum Ella Uyarvum
Ennil Nilaivaramaanavarkae

Enakkaai Nirkum Yesuvukkae
Enakkaai Paesum Yesuvukkae – 2

1. Naan Yedutha Theermaanangal
Ondranpinnaal Thoatranavae – 2
Soaraamal Enakkaaga Uzhaipavarae
Thoarkaamal Thunai Nindru Kaappavarae – 2

2. En Kai Meeri Poanadhellaam
Um Karathaal Saathiyamae – 2
En Karam Thavariyae Izhandhadhellaam
Um Karam Thavaraamal Meettidumae – 2

3. Parindhuraigal Seiyyaadhadhai
Paran Kirubai Seidhidumae – 2
Thaanaaga Munvandhu Udhavineerae
Munnurimai Naanendru Kaanbiththeerae – 2

Thalaimuraigal Thandi Nirkum Thayavu – தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

Thalaimuraigal Thandi Nirkum Thayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு -2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

1. (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே -2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு

2. சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே -2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு

Thalaimuraigal Thaandi Nirkum Thayavu
(En) Thalai Nimirnthu Vaazha Seiyum Thayavu -2
Paarapatcham Paarkkatha Thayavu
Eliyavanai Uyarththi Vaikkum Thayavu
Thalaimuraigal Thaandi Nirkum Thayavu

Unga Thayavu Periyathae
Unga Thayavu Siranthathae
Unga Thayavu Ennai Sethamindri Paathukaaththathae
Oru Sethamindri Thalaimuraiyaai Paathukaaththatahe

1. (Ennai) Kuri Paarththu Eriyappatta Savulin Ambugal
Thisai Maari Poga Seitha Thayavu Periyathe -2
Oru Adiyin Thooraththile Kanda Maranathai
Thaduththi Niruththi Pathukaaththa Thayavu Periyathe
Intha Thayavai Paada Jeevan Ullathae – Unga Thayavu

2. Sutri Nindra Jalangal Ellam Amizhnthu Ponathae
En Pezhai Mattum Paththiramai Malayil Nindrathae-2
Moozhgum Endru Ethirpaarththa Kangal Thotrathae
Yereduththu Paarkkum Vannam Uyarththi Vaiththathae
Ennai Uyara Uyara Kondu Selluthae – Unga Thayavu

Kartharai Dheivamaaga Kondoar – கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

Kartharai Dheivamaaga Kondoar
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை

வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே

ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே

வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapatadhillai
Avaraiyae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhillai

Vaendumpoadhellaam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunaiyaanaarae
Jebikkum Poadhellaam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunaiyaanaarae

Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai

Verumaiyaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Aerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagai Nirappivittaarae

Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhaiyellam Nizhalaaga Kooda Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae

Ennai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி

Ennai Valladikku Neeki

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2

எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் – 2

1. ஆழத்தில் இருந்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே – 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் – 2 (…எந்தன்)

3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் – 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர் தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

Ennai Valladikku Neekki Um Karangalaal Thookki
Unnathaththil Vaiththathai Marappeno – 2
Neer Sonnathinaal Naan Pizhaiththukkonden
Neer Kandathinaal Naan Jeevan Pettren – 2

Enthan Aatharave Enthan Adaikkalame
Enthan Maraividame Ummai Aaraathippen – 2

1. Aazhaththil Irunthennai Thookkivitteer
Uyarvaana Thalangalil Niruththi Vaitheer – 2
Ethiraana Yosanai Adhamaakkineer
Unthanin Yosanai Niraivettrineer – 2 (…Enthan)

2. Aayiram Ennodu Porittaalum
Ennai Merkollum Athigaaram Peravillaiye – 2
Kirubaiyinaal Ennai Moodikkondeer
Naan Thallunda Idangalil Uyarththi Vaitheer – 2 (…Enthan)

3. Karadaana Paathaiyil Thookki Sendreer
Mullulla Idangalil Sumanthu Kondeer – 2
Enakkaaga Kuriththathai Enakku Thantheer
Neer Thantha Dharisanam Niraivettrineer – 2 (…Enthan)

Aayiranggal Paarthalam

Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Ummai Pole Azhagae Innum Kandepikkellaye
Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Yesuvae Pole Azhagae Innum Kandepikkellaye

Naan Unggale Marantha Pothum
Neengge Enna Marakeve Ille
Naan Keele Vizhunthe
Neenge Enna Vitte Kodekellaye
Ade Manushan Maranthe
Neenge Enna Thooke Maarekellaye

Ummai Aarathippen En Azhagae
Enna Manikka Vanthe Azhagae
Ummai Paade Ummai Puzhalae
Oer Naave Patthalaye-2x

Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Neenge Enna Vitte Kodekellaye
Naan Udangge Poi Kidenthen
Naan Norukkapatte Kidenthen
Yenna Otti Serke Neenge Vanthathe Naan Maarakellaye
Yen Kannerai Neengge Thudacha Vittethe Naan Maarakellaye

Azhaithavare Azhaithavare – அழைத்தவரே! அழைத்தவரே!

Azhaithavare Azhaithavare
அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே

2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

Oruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்

Oruvarum Sera Oliyinil
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர் எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே (2)

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள் இல்லையே (2)

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)

Oruvarum saeraa oliyinil
Vaasam seidhidum
Engal Dhaevanae
Manidharul yaarum kandidaa
Magimai niraindhavar
Engal Dhaevanae

Neerae Unnadhar
Neerae Parisuthar
Neerae Magathuvar
Ummai aaraadhipaen (2)

Ael-Olaam Neerae
Umaku aarambam illaiyae
Ael-Olaam Neerae
Umaku mudivondrum illaiyae (2)

Ummai arindhavar illaiyae
Ummai purindhavar illaiyae
Ummai kandavar illaiyae
Umaku uruvangal illaiyae

Neerae Unnadhar
Neerae Parisuthar
Neerae Magathuvar
Ummai aaraadhipaen (2)