Anbaram Yesuvin – அன்பராம் இயேசுவின்

Anbaram Yesuvin
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்

காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்

எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் – அன்பராம் இயேசுவின்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்

நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்

எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர் – அன்பராம் இயேசுவின்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்

ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு

அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய் – அன்பராம் இயேசுவின்

Anbaraam yaesuvin
Anbinai enniyae
Alavillaa thudhigaludan
Sandhoasha geedhangalaal
Ennaalumae paadiyae poatriduvaen
Paramanai sthoatharippaen

Jeevanullavarai yaesu endhan maeippar

Kavalai enakku illaiyae

Pullulla idangalilum amarndha thanneerandaiyum

Ennai nadathi selluvaar

Kaalam maarinaalum

Boomi azhindhaalum

Yaesu endrum maaridaar

Endhan naesarae endhan adaikkalamaanavar

Poakkilum varathilum ennai karampatri nadathuvaar

Ularndha elumbugalai uyirkka seidhavarae

Umakae nigarae illaiyae 

Sivandha samuthirathai irandaai pilakka seidhu

Ennai nadathi selluveer

Nalla dhaevanin
Valla vaarthaigalaal

Endhan vaazhvu malarum

Endhan dhaevanae endhan parigaari aanavar

Pudhiya kirubaigal anudhinamum tharubavar

Vaana saenaigal soozha ekkaala satham muzhanga

Maegameedhil oru naal

Maasatra joadhiyaaga magimai raajanaaga 

Manavaalan vandhiduvaar
a
Ayathamaagiduvaen anbarai sandhithida

Parisuthar koottathoadu

Andha naal sameebamae
Endhan idahayam poorikkudhae

Selvaen anbaroadu vaazhvaen nithiyamaai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *