Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

21 thoughts on “Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

  1. What is the meaning of the stanza

    ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

    1. Even if I fly with spreaded wings to the high sky, I will draw nearer to you in my transformed body after reaching high above the sky

  2. Please let me know when the meaning of the stanza

    ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

  3. தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் a word is missing

    1. Thank you notifying us, We have corrected the changes, தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்.

      Regards,
      Dave

  4. Nice song …correction needed in தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் line…..thanks

    1. Thank you bro. Fredrick for notifying us, We have corrected the changes, தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்.

      Regards,
      Dave

  5. What a soul searching song ! The tune and this lyrics absolutely indescribable! Who is the author!? Any story about this song!? God bless all your work for His Kingdom.

  6. Vedanayagam Sastriar of Thanjavur, poet-lyricist, court poet in the palace of Serfoji II. Aged 93.He is a poet and writer with 133 books and over 500 lyrics to his credit. This Vedanayagam must be distinguished from the other and later Mayavaram Vedanayagam Pillai. Wikipedia
    Born: 1774
    Died: 24 January 1864

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *