Natha Natha Intha Jeeviyam – நாதா நாதா இந்த ஜீவியமே

Natha Natha Intha Jeeviyam
நாதா.. நாதா.. நாதா…
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ

1. காரிருள் சூழும் நேரமதில் – என்
கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா – நாதா

2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மைலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா – நாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *