All Songs by Emil Jebasingh

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா

Anbulla Yesaiya
அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும்

Antha Naal Vanthidum
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Athisayamaana Oli Maya Naadaam – அதிசயமான ஒளிமய

Athisayamaana Oli Maya Naadaam
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதி

2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் – அதி

3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி – அதி

4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதி

Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம்

Anbin Uruvam Aandavar
1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா

ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா – 2

2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே – ஓடிவா

3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே – ஓடிவா

4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

Anaithu Samayathu Meipporul Yesuvae – அனைத்து சமயத்து

Anaithu Samayathu Meipporul Yesuvae
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே…

உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே…

1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
மெய்ப்பொருள் இயேசுவே…

2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
மெய்ப்பொருள் இயேசுவே…

3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
மெய்ப்பொருள் இயேசுவே…