All Songs by Johnsam Joyson

Raja Neer Seitha – ராஜா நீர் செய்த நன்மைகள்

Raja Neer Seitha
ராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி

1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

Raja Neer Seitha Nanmaigal
En Tharanikkum Mealanathea

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri-2

1. Enmel Neer Vaitha Um Karanam
Immattum Ennai Nadathinathae
Ondrumilla En Nilaikandu
Asattai Pannaathavara
Anbaal Ellam Thantheerae

2. Needhiyum Nyaanamum Aanavarae
Yesuvae Neerae Naadhar Avar
Arpamaana En Aarambithai
Arpamaana En Aarambithai
Asattai Pannaathavarae
Ambal Ellam Thantheerae

En Nilamai Nandrai – என் நிலைமை நன்றாய்

En Nilamai Nandrai

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2

தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை

Thirumbi Parkiren – திரும்பி பார்கிறேன்

Thirumbi Parkiren
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
திரும்பி பார்கிறேன்

2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
– திரும்பி பார்கிறேன்

Thirumbi paarkkiren Vantha paathayai
Kanneerodu Karthaave Nandri solgiren-2
Nadathineer ennai Amarntha thanneer andayil
Thookkineer ennai Unthan pillaiyakkineer-2

Thiruppi thara ondrum illayae-Thirumbi

1. Maaravin Kasappai ennil neenga seytheere
Mathuramaana vaazhvai enakku
thirumba thantheere-2
Magizhchchiyinaal enthan ullam
Niramba seitheere-2

Magimai paduththuven Magimai paduththuven
Jeevanulla kalamellam ummai uyarththuven-2
Thirumbi Parkkiren

2. Sothanaigal soozhntha velai kathari kooppitten
Soraamal um karaththaal anaiththu kondeere-2
solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2

Nandri Solluven Nandri Solluven
Jeevanulla kalamellam ummai vaazhththuven-2
Thirumbi Parkkiren

Yakobin Devan – யாக்கோபின் தேவன்

­Yakobin Devan

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)

1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

Yaakkoabin Devan En Devan
Enakkendrum Thunai Avarae
Ennaalum Nadaththuvaarae (2)

1. Yethum Illai Endra Kavalai Illai
Thunaiyaalar Ennai Vittu Vilagavillai (2)
Sonnathai Seythidum Thakappan Avar
Nambuvaen Iruthi Varai (2) – Yaakkoabin

2. En Oattaththil Naan Thanimai Illai
Nesiththavar Ennai Verukkavillai (2)
Thakappan Veettil Koddu Serththiduvaar
Nambuvaen Iruthi Varai (2) – Yaakkoabin

 

Puthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம்

Puthu Kirubaigal Thinam

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

1. என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை வேறொன்றும் இல்லையே

2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணிப்போல காத்திட்டீர்

3. பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னைப் பாடி மகிழ வைத்தீர்

Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Magimaiyai Naan Kana
உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்

Aayiram Aayiram Nanmaigal – ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

Aayiram Aayiram Nanmaigal
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை

1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே

Um Azhagaana Kangal – உம் அழகான கண்கள்

Um Azhagaana Kangal
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Azhagaana Kangal ennai kandathaalae
Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen

1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu thaedi vantha nalla naesarae

2. Thooki eriyappatta ennai Vaendumentu solli
Saerththu konda nalla naesarae

3. Ontumillatha ennai um Kaarunyaththaalae
Uyarththi vaiththa nalla naesarae