Devanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்

Devanae Naan Umathundail

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *