Esanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை

Esanae Um Sevaike
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)

2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)

3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

Eesanae um saevaikae enai
Poosaiyudanae eendhanae (2) en
Uyir thandhennai aatkondaenae
Dhairyam thandhumae nadathidum (2)

1. Ennamellaam idargal bayangal
Kanni poala soozhndhaalum (2)
Annal neer ennoadirundhaal
Thinnamaai avai theerndhidum (2)

2. Ennarugil neer endha vaelaiyum
Ondraai irupadhaai unaravae (2)
Sathiya vazhiyil sanjarikavae
Thatham seidhaen ennaiyae (2)

3. Magimaiyil naan undhan veetil
Magizhndhu vaazhvaen endreerae (2)
Umaiyallaadhae igathilum naan
Imaipozhudhum thanithiraen (2)

3 thoughts on “Esanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *