All Songs by Hannah John

Ullankaiyile Ennai – உள்ளங்கையிலே என்னை

Ullankaiyile Ennai

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
தாயின் கருவிலே என்னை கண்டவர்
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

1. சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
மாராவை போல வாழ்க்கை கசந்தாலும்
மதுரமாய் மாற்ற நீர் வல்லவர்
சோர்ந்திடாமல் உம்மை நம்பி பின் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும்
எரிகோவின் மதில் முன் நின்றாலும்
அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால்
தடைகளை தகர்த்தெறிந்து முன் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே