Song Tags: Good Friday Tamil Songs

Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை

Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

Vinthai Kiristhesu Raja – விந்தை கிறிஸ்தேசு ராஜா

Vinthai Kiristhesu Raja
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

Yezhai Manu Uruvai – ஏழை மனு உருவை

Yezhai Manu Uruvai
ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை

2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை

3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும்
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை

4. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய்
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை

5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே – ஏழை

Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்

Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….

1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன்

Thadumaarum Kaalgal
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே
கண்கள் குளமாகிப்போனதையா!!!!

2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

Ellame Mudinthathu Endru – எல்லாமே முடிந்தது என்று

Ellame Mudinthathu Endru
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)

நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)

நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)

Ellaamae mudindhadhendru
Ennai paarthu igazhndhanar
Iniyendrum ezhumbuvadhillai
Endru solli nagaithanar (2)
Aanaalum neenga ennai
Kandavidham periyadhu
En uyarvin perumaiyellaam
Um oruvarukuriyadhae (2)

Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)

Udaikkappatta paathiramaanaen
Ubayoaga matrirundhaen
Ondrukkum udhavuvadhillai
Endru solli odhukkappattaen (2)
Kuyavanae ennai vanaindhadhu
Vizhundhu poana idangalillellaam
En thalaiyai uyarthiyadhae (2)

Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி

Yerukindrar Thalladi
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு

3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு

4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு

5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு

6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு

Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum Velai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari anbai ennidum vaelai
Kangal kalangidudhae
Karththaa um paadugal ippoadhum ninaithaal
Nenjam negizhndhidudhae

Gethsamanae poongaavilae
Kadhari azhum oasai
Eththisaiyum dhonikkindradhae
Engal manam thigaikkindradhae
Kangal kalangidudhae – Kalvaari

Siluvaiyil maatti vadhaithanaroa
Ummai senniram aakkinaroa
Appoadhum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerandroa
Appaa um manam peridhae – Kalvaari

Emmaiyum ummaipoal maatridavae
Um jeevan thandheerandroa
En thalai tharaimattum thaazhthukindraen
Thandhu vittaen anbin karangalilae
Aetru endrum nadathum – Kalvaari

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா