Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar
எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளால் என்னை நிரப்பினார்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன் கெம்பீரிப்பேன் ஆ…..அல்லேலூயா……ஆ……அல்லேலூயா
1. நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன்
என் ஜீவனை பலியாக படைக்கிறேன் நான்.
2. உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே காணேன்
உண்மையாய் உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை.
3. புழுதியின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து உந்தன் சித்தம் செய்வேன்.