All Songs by david

Ella Naamathilum – எல்லா நாமத்திலும்

Ella Naamathilum
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே – 2

எல்லா நாவுகளும்.. இயேசுவே கர்த்தர் என்று (2)
அறிக்கை செய்திடுமே.. உம்மை ஆராதித்திடுமே (2)

பரிசுத்தரே.. பரிசுத்தரே.. நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே.. பாத்திரரே.. எல்லா மகிமைக்கும் பாத்திரரே

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2 (…எல்லா நாமத்திலும்)

ஆராதிப்போம் (3) உம் நாமத்தை
உயர்த்திடுவோம் (3) உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை – 2

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம் – 2

Uyirulla Yesuvin Karangalil – Unthan Sitham Ennil Irukum – உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

Uyirulla Yesuvin Karangalil

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
உபயோகியும்….

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன் – உம்மை
என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே

ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
உம்மை நம்பாமல் நித்தியமில்லை

நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்
நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
சாட்சியாய் என்றும் வாழுவேன்

Uyirulla Yesuvin Karangalilae
Ennai Muluvathum Arppanniththaen
Aettukollum Aenthikollum
Upayokiyum….

Unthan Siththam Ennil Irukkum
Valuvaamal Athil Nadappaen – Ummai
Entum Patti Kolluvaen
En Vaalvil Neerthaan Ellaamae

Aanantham Aanantham Unthan Samookam
Aaraathanai Vellaththil Mithakkiraen
Ullam Niramba Vaay Niraiya Sthoththiramae

Ummaith Thuthikkaamal Irukka Mutiyavillai
Siluvai Uyarththaamal Urakkamaeyillai
Ummai Sollaamal Vaalvaeyillai
Ummai Nampaamal Niththiyamillai

Neer Seytha Sakala Uparakaarangal
Ninaiththu Ninaiththuth Thuthikkinten
Allaelooyaa Aaraathanai Umakkuththaanae

Unthan Anpai Engum Solluvaen
Nanti Maravaamal Entum Nadappaen
Paththil Ontai Umakku Koduppaen
Saatchiyaay Entum Vaaluvaen

 

Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை

Unnathar Neere Maatchimai
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2

உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே

1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி

2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி

Naan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன்

Naan En Nesarudaiyavan
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan en naesarudaiyavan en naesar ennudaiyavar
Saaroanin roajaa pallthaakkin leeli
Ivarae en naesar ivarae en sinaegithar
Ivarae en piriyamaanavar

1. Paaviyaana ennaiyum avar thaedi vandhaarae
Manavaalanum en thoazhanum enakkellaamaanaarae
Avar saevai seivaen
Avarkkaagavae vaazhvaen

2. Thanimaiyaana naerathil en thunaiyaai vandhaarae
Belaveenamaana naerathil tham kirubai thandhaarae
Avar naamam uyarthuvaen
Avar saatchiyaai vaazhvaen

3. Enakkaagavae yaavaiyum avar seidhu mudiththaarae
Aetra naeraththil en thaevaigal yaavum sandhiththaar
Uyirulla naalellaam
Avar naamam paaduvaen

4. Ennaiyum avarudan azhaiththu sendrida
Maegangal meedhilae vaegam varuvaarae
Avaroadu vaazhvaen
Naan nithya niththiyamaai

Itho Manithargal – இதோ மனிதர்கள் மத்தியில்

Itho Manithargal Mathiyil
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)

1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்

Itho manithargal mathiyil
Vasam seibavarae
Enggal naaduvile vasithidae
Virimbidum theivamae (devanae)

1. Umakku singhasanam ammaithida
Ummai thuthikindrom yesuvae
Parisutha alangarathudanae
Ummai tholugindrom yesuvae

Enggal mathiyil ulavidoam
Enggalodu yendrum vasam seiyum

Uyaramum Unnathamum – உயரமும் உன்னதமுமான

Uyaramum Unnathamum
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

Uyaramum Unnadhamum Aana
Singasanathil Veettirukkum (2)
Senaigalin karthar Aagiya
Rajavai yen kangal Kaanattum (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

1. Oruvarai Saavamai ullavar ivar
Serakooda volidhanil vaasam seivavar (2)
Agilathai vaarthaiyal sirustitthavar
Yesuve ummaye Aaradhippein (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

2. Aadhiyum Andhamum Aanavar ivar
Albhavum Omegavum Aanavar ivar (2)
Irundhavarum Iruppavarum Seekkiram
Varappogum Raja ivar (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

3. Yella Naamatthilum Melanavar
Mulangaalgal Mudangidum ivarkku Mun (2)
Thudhi Ghana Maghimaikku Paatthirarae
Thooyavar YESUVAI vuyartthiduvein

Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (4)

 

Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்

Vakku Panninavar Maridar
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

Vaakku Panninavar Maaridaar
Vaakkuthatham Niraivaetruvaar
Sornthu Pokaathae – Nee
Sornthu Pokaathae
Unnai Alaithavar Unnmaiyullavar

1. Avar Manithanallavae
Poi Solvathillaiyae
Avar Unnmaiyullavar
Vaakku Marappathillaiyae
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae

2. Kaalangal Kadanthatho
Thaamatham Aanatho
Vaakku Thathangal – Un
Vaalvinil Tholainthatho
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae

Naane Unnai Sugamaakum – நானே உன்னை சுகமாக்கும்

Naane Unnai Sugamaakum
நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்

நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்

Uyirtheluntha Naam Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு

Uyirtheluntha Naam Yesu
உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம் -2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த

Undhan Maha Parisutha
உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்