பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே – 2
யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை
நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ – 2
1. மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே -2
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
– யாவே நீர் என்றும்
2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவீர்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2
– யாவே நீர் என்றும்
Bayame Nam Vaazhvil Aazhvadu Illai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illa Nilai Maaridum
Pudhu Nambikkaithidan Nammil Perugidumae -2