All Songs by david

Alleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே

Alleluya Thuthi Umake
அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே (2)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)

1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலூயா

2. கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) – அல்லேலூயா

Allaelooyaa thudhi umakkae
Allaelooyaa thudhi umakkae (2)
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer (2)

1. Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaaveedhukkul vaithavarae
Aadugal maeithavanai jaadhigal maththiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae (2) – Allaelooyaa

2. Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai (2) – Allaelooyaa

Esanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை

Esanae Um Sevaike
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)

2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)

3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

Eesanae um saevaikae enai
Poosaiyudanae eendhanae (2) en
Uyir thandhennai aatkondaenae
Dhairyam thandhumae nadathidum (2)

1. Ennamellaam idargal bayangal
Kanni poala soozhndhaalum (2)
Annal neer ennoadirundhaal
Thinnamaai avai theerndhidum (2)

2. Ennarugil neer endha vaelaiyum
Ondraai irupadhaai unaravae (2)
Sathiya vazhiyil sanjarikavae
Thatham seidhaen ennaiyae (2)

3. Magimaiyil naan undhan veetil
Magizhndhu vaazhvaen endreerae (2)
Umaiyallaadhae igathilum naan
Imaipozhudhum thanithiraen (2)

Naan Potri Paduvaen – நான் போற்றிப் பாடுவேன்

Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)

நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)

Kuppayana Ennai – குப்பையான என்னை கோபுரத்தில்

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா

1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா

2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

Kuppayana Ennai Koburathil vaitheere
Uthavana ennai umakai therintheerea
Neengatha Yellam Yesapa,
En Yesapa
Ummai vitta yaarumillapa -2x

1. Kalagina enakku Aaruthal alitheere
Kanneril enakku Kirubai thantheere
Sornthupoi irunthenappa,
En Yesapa
Sogangal theertheerappa

2. Thanimaiyil ennakku thunayayai nindreere
Anathai ennakku adaikalam thanthire
Thaagathal thavithenappa,
En Yesapa
Jeeva thaneer thantheerappa

Imaipoluthum Ennai – இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்

Imaipoluthum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)

நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்

என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)

என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

Marakka Paduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்

Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Um Anbu Ethanai Perithaiya – உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

Um Anbu Ethanai Perithaiya
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)

பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Ratchanya Magimai – இரட்சண்யம் மகிமை

Ratchanya Magimai
இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)

1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Puthiya Varudathile – El-Hannora – புதிய வருடத்திலே

புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்

புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

1. என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (2)

2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே