Kartharai Thuthiyungal Karuthai Paadungal
கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள் அவர் நாமம் உயர்த்திடுங்கள் கர்த்தரே பெரியவர் அவரே பரிசுத்தர் அவரையே தொழுதிடுங்கள்
சகல கிருபை நிறைந்தவர் வல்லமையுள்ளவர் கைகொட்டி பாடிடுங்கள்
1. துதிகள் நடுவிலே – வாசம் செய்கின்றார் ஒருமித்து துதித்திட – அற்புதம் நிகழுமே
2. எரிகோ வீழ்ந்திடும் – எளிதாய் சுதந்தரிப்போம் ஓசன்னா முழங்குவோம் – துதி பலி செலுத்துவோம்
3. பவுலும் சீலாவும் – தேவனை துதித்தனர். கட்டுகள் கழன்றது – கதவுகள் திறந்தது
4. யோபு துதித்திட – இன்னல் அகன்றது இரட்டிப்பாய் நன்மைகள் – தேவனால் வந்தது