All Songs by david

Thirandha Vaasala En Munne – திறந்த வாசலை என் முன்னே

Thirandha Vaasala En Munne

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க
சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க
நான் நெனைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க – 2

நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் (கிருபையில வாழுகிறோம்) நாதா – 2

1. வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு கண்ணு முன்னால
இருப்பு தாழு முறிஞ்சது உங்க வல்லமையால
சூழ்நிலைகள் மாறினது வார்த்தையினால
இழந்ததெல்லா திரும்ப வந்தது கிருபையினால – 2 (…நன்றி)

2. ஏசேக்கு போனதால கவலையே இல்லை
சித்னாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால – 2 (…நன்றி)

Thirandha Vaasala En Munne Vachcheenga
Thadai illaama Pravesikka Udhavi Senjeenga
Chinnavan Enna Peruga Senjeenga
Naan Nenaichu Kooda Paarkkaadha Vaazhkka Thandheenga – 2

Nandri Nandri Nandri Dhevaa
Nandri Nandri Yesu Raajaa
Nandri Nandri Nandri Devaa
Unga Kiriyaigalil Magizhugirom (kirubaiyila vaazhukirom) Naadhaa – 2

1. Vengala Kadhavu Udanchu Pochu Kannu Munnaala
Iruppu Thaazhu Murinjadhu Unga Vallamaiyaala
Soozhnilaigal Maarinadhu Vaarthayinaala
Izhandhadhellaam Thirumba Vandhadhu Kirubayinaala – 2 (…Nandri)

2. Yesekku Ponadhaala Kavalaiye illa
Siththnaavum Ponadhaala Kavalaiye illa
Idam Kondu Naan Peruga Nenachadhunaala
Rehobotha Thandheenga Kirubaiyinaala – 2 (…Nandri)

Indam Kollamal Perugaseiyum – இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் – Seerpaduthuvaar

Indam Kollamal Perugaseiyum

இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்

1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்

2. மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்

 

Asaathiyangal Saathiyame – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyame

அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உந்தன் வார்த்தையாலே – 2
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2

எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே

எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2

1. நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துணைநின்று காப்பவரே – 2

2. என் கை மீறி போனதெல்லாம்
உம் கரத்தால் சாத்தியமே – 2
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே – 2

3. பரிந்துரைகள் செய்யாததை
பரன்கிருபை செய்திடுதே – 2
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே – 2

Asaathiyangal saathiyame
Devaa Unga Vaarthayaalae – 2
Asayaadha Malaikooda Asaindhidumae
Amaraadha Puyalkooda Amarndhidumae – 2

Ella Pugazhum Ella Ganamum
Ennil Asaathiyam Seibavarkae
Ella Thudhiyum Ella Uyarvum
Ennil Nilaivaramaanavarkae

Enakkaai Nirkum Yesuvukkae
Enakkaai Paesum Yesuvukkae – 2

1. Naan Yedutha Theermaanangal
Ondranpinnaal Thoatranavae – 2
Soaraamal Enakkaaga Uzhaipavarae
Thoarkaamal Thunai Nindru Kaappavarae – 2

2. En Kai Meeri Poanadhellaam
Um Karathaal Saathiyamae – 2
En Karam Thavariyae Izhandhadhellaam
Um Karam Thavaraamal Meettidumae – 2

3. Parindhuraigal Seiyyaadhadhai
Paran Kirubai Seidhidumae – 2
Thaanaaga Munvandhu Udhavineerae
Munnurimai Naanendru Kaanbiththeerae – 2

Thalaimuraigal Thandi Nirkum Thayavu – தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

Thalaimuraigal Thandi Nirkum Thayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு -2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

1. (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே -2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு

2. சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே -2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு

Thalaimuraigal Thaandi Nirkum Thayavu
(En) Thalai Nimirnthu Vaazha Seiyum Thayavu -2
Paarapatcham Paarkkatha Thayavu
Eliyavanai Uyarththi Vaikkum Thayavu
Thalaimuraigal Thaandi Nirkum Thayavu

Unga Thayavu Periyathae
Unga Thayavu Siranthathae
Unga Thayavu Ennai Sethamindri Paathukaaththathae
Oru Sethamindri Thalaimuraiyaai Paathukaaththatahe

1. (Ennai) Kuri Paarththu Eriyappatta Savulin Ambugal
Thisai Maari Poga Seitha Thayavu Periyathe -2
Oru Adiyin Thooraththile Kanda Maranathai
Thaduththi Niruththi Pathukaaththa Thayavu Periyathe
Intha Thayavai Paada Jeevan Ullathae – Unga Thayavu

2. Sutri Nindra Jalangal Ellam Amizhnthu Ponathae
En Pezhai Mattum Paththiramai Malayil Nindrathae-2
Moozhgum Endru Ethirpaarththa Kangal Thotrathae
Yereduththu Paarkkum Vannam Uyarththi Vaiththathae
Ennai Uyara Uyara Kondu Selluthae – Unga Thayavu

Kartharai Dheivamaaga Kondoar – கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

Kartharai Dheivamaaga Kondoar
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை

வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே

ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே

வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapatadhillai
Avaraiyae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhillai

Vaendumpoadhellaam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunaiyaanaarae
Jebikkum Poadhellaam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunaiyaanaarae

Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai

Verumaiyaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Aerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagai Nirappivittaarae

Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhaiyellam Nizhalaaga Kooda Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae

Paranthu Kaakum Patchiyaipola – பறந்து காக்கும் பட்சியைபோல

Paranthu Kaakum Patchiyaipola

பறந்து காக்கும் பட்சியை போல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே – 2
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே – 2

யாவே (6)
யாவே ரொஃபேகா (2)

1. என் சார்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் – 2
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்தர சுகத்தை தந்தவரே – 2 (…யாவே)

2. உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே – 2
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் (எங்களை) உயிர்ப்பிக்கும் ஆவியே – 2 (…யாவே)

3. மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே – 2
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே – 2 (…யாவே)

Paranthu Kaakkum Patchiyai Pola
Engalai Kaakkum Karththaave
Patchikka Ennum Sathuru Munne
Aatharavaaga Iruppavare – 2
Vaadhai Ennai Anugaamal
Koodaaramaaga Iruppavare

Yahwey (6)
Yahwey Ropheka

1. En Saarbil Neer Baliyaaneer
Enthan Idaththai Eduththu Kondeer – 2
Neer Konda Thazhumbugalaal
Niranthara Sugaththai Thandhavare – 2 (…Yahwey)

2. Um Aavi Ennil Vasippathinaal
Mariththavai Ellam Uyirppikkume – 2
Uyirththezhuntha Um Vallamaiyaal
Ennaiyum (Engalai) Uyirppikkum Aaviye – 2 (…Yahwey)

3. Maruththuvarin Arikkaiyinai
Siluvaiyin Raththam Maattridume – 2
Neediththa Naatkalinaal (Aayulinaal)
Engalai Thirupthi Seibavare – 2 (…Yahwey)

Sonna Sollai Kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

Sonna Sollai Kaappattrum Deivam

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
உம்மையன்றி யாரும் இல்லை
முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
உங்களுக்கு ஈடே இல்லை
நீர் சொல்லி அமராத
புயல் ஒன்றை பார்த்ததில்ல
நீர் சொல்லி கேளாத
சூழ்நிலை எதுவுமில்ல

ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும்
இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே

நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
கைவிட மாட்டேன் என்றீர்
நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
வாய்க்காலாய் வருபவரே

சொன்னதை செய்யும் அளவும்
கைவிட மாட்டேன் என்றீர்
இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
தேசத்தின் தலையாக்கினீர்

பூர்வத்தில் அடைபட்டதை
எனக்காக திறந்து வைத்தீர்
ஒரு மனிதனும் அடைக்க முடியாத
ரெகொபோத்தை எனக்கு தந்தீர்

Yeno Yeno Yen Intha Muzhuval – ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்

Yeno Yeno Yen Intha Muzhuval
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
அசத்தனாம் என்மேல்
ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை

ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு

தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்

நான் என்ன செய்தேன் என்று
கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

Yeno Yeno Yen Intha Muzhuval
Asathanaam Enmel
Aasathi Konda
Asathuru Um Pola Evarumillai

Yeno Yen Intha Asalai Anbu
Yeno En Meedhu Siluvai Anbu

Thavarugal Kondaen
Nasinaigal Kondaen
Aanalum Siluvaiyin
Thalaiyali Kandaen

Asadam Endre
Asattai Kandaen
Asaraa Um Asarangal Thaangakandaen

Naan Enna Seithaen Endru
Ketkum Ulagil
Enakkaaga Sedhitta Anbai Kandaen
Thaniya Oru Thagappanin Thatpam Kandaen

Ennai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி

Ennai Valladikku Neeki

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2

எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் – 2

1. ஆழத்தில் இருந்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே – 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் – 2 (…எந்தன்)

3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் – 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர் தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

Ennai Valladikku Neekki Um Karangalaal Thookki
Unnathaththil Vaiththathai Marappeno – 2
Neer Sonnathinaal Naan Pizhaiththukkonden
Neer Kandathinaal Naan Jeevan Pettren – 2

Enthan Aatharave Enthan Adaikkalame
Enthan Maraividame Ummai Aaraathippen – 2

1. Aazhaththil Irunthennai Thookkivitteer
Uyarvaana Thalangalil Niruththi Vaitheer – 2
Ethiraana Yosanai Adhamaakkineer
Unthanin Yosanai Niraivettrineer – 2 (…Enthan)

2. Aayiram Ennodu Porittaalum
Ennai Merkollum Athigaaram Peravillaiye – 2
Kirubaiyinaal Ennai Moodikkondeer
Naan Thallunda Idangalil Uyarththi Vaitheer – 2 (…Enthan)

3. Karadaana Paathaiyil Thookki Sendreer
Mullulla Idangalil Sumanthu Kondeer – 2
Enakkaaga Kuriththathai Enakku Thantheer
Neer Thantha Dharisanam Niraivettrineer – 2 (…Enthan)

Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

Valakamal Ennai Thalaiyakuveer
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க