Siluvaiyil Jeevanai Vittu – சிலுவையில் ஜீவனை விட்டு

Siluvaiyil Jeevanai Vittu

சிலுவையில் ஜீவனை விட்டு
கல்லறையில் வைக்கப்பட்ட
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
பரமர் ஜெயித்தெழுந்தார்
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
விண் கீதம் முழங்கவே

1. மாதர் மூவர் சென்றாரே தேவன் தேகத்தை காண
கல்லறையில் தூதர்தான் கண்டாரே அம்மூவர்
நம்பாமல் தோமா கர்த்தர் விலாவை நோக்கினான்
நாதரின் கையும் கால்களைக் கண்ட என் நாதா சுவாமி என்றான்.

2. அவரைச் சேர்ந்த யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும்
சாவின் பயம் நீங்கவே உயிர்த்தெழுந்தாரே
இந்நாளில் மரித்தெழுந்த மாஇயேவை நேசிப்போம்
சாவிலும் ஜீவன் கைவிடாது துதித்துப்பாடிடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *