Aaviyodum Arathipen – ஆவியோடும் ஆராதிப்பேன்

Aaviyodum Arathippen
ஆவியோடும் ஆராதிப்பேன்
உண்மையோடும் ஆராதிப்பேன்
பெலத்தின் மேலே பெலன் அடைந்து
ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம்

அல்லேலூயா ஆராதனை
எல்லையில்லா ஆராதனை

1. முடிந்து போன என் வாழ்க்கையையும்
மகிமையாக மீட்டு தந்தாரே
சகலமும் நன்மையாக மாற்றினாரே
அவருக்கே என் ஆராதனை

2. எந்தன் எதிரியின் கண் முன்னே
வெற்றி மகுடம் சூட்டினரே
தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே
அவருக்கே என் ஆராதனை

3. தகுதி இல்லாத என்னையுமே
அழைத்தாரே அவர் சேவை செய்ய
தரிசனம் தந்து உயர்த்தினாரே
அவருக்கே என் ஆராதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *