Ullame Magilthidum – உள்ளமே மகிழ்ந்தாடும்

உள்ளமே மகிழ்ந்தாடும் !
இதயமே உம்மை போற்றும் ! (2)

என் உள்ளமே
மகிழ்ந்தாடும் !
என் இதயமே உம்மை போற்றும் ! (2)

1.நெருக்கங்கள் குழப்பங்கள் நேரிட்டாலும்,
கர்த்தர் கரம் என்னை என்றும் தாங்கினதே ! (2)
பிரமாண்டமாய் சிறப்பானதை,
பிரமாண்டமாய் மிக சிறப்பானதை,
உம் வல்ல கரம் என்றும் செய்திட்டதே ! (2)
– என் உள்ளமே

2.அவமானம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும்,
கர்த்தர் அன்பின் குரல் என்னை தேற்றினதே ! (2)
வாழ்நாளெல்லாம் மகிழும்படி,
வாழ்நாளெல்லாம் நான் மகிழும்படி,
துன்பத்திற்கு ஈடாக களிப்பாக்கினீர் ! (2)
– என் உள்ளமே

3.வருத்தங்கள் பசி தாகம் ஏற்பட்டாலும்,
ஒரு ஜீவ நதி எனக்குண்டு பயமில்லையே ! (2)
செழிப்பானதை பெருவெள்ளமாய்,
செழிப்பானதை பெருவெள்ளமாய்,
பொங்கி பொங்கி நிறைத்தென்னை மூடிடுதே ! (2)
– என் உள்ளமே

என் உள்ளமே
மகிழ்ந்தாடும் ம் ம் ம்.
என் இதயமே உம்மை போற்றும் ம் ம் ம் (3)

என்றும் நன்றி சொல்லுவேன்,
நீர் செய்த நன்மைக்காய் ! உயிருள்ள நாளெல்லாம்,
உந்தன் நாமம் உயர்த்துவேன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *