Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
என்றென்றும் வந்தடையும் கன்மலையம் இயேசுவே
சரணங்கள்
1. என்றென்றும் வந்தடையும் கன்மலையம் இயேசுவே
எந்தனின் தாகம் தீர்க்கும் கன்மலையம் இயேசவே
ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நாடியே
உலகெல்லாம் அலைந்தலைந்து தேடியும் நான் காண்கிலேன்
பல்லவி
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாகத் தங்குவேன்
கர்த்தரின் செட்டையின்கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
2. கர்த்தரின் காருண்யம் அதெத்தனை பெரியதே
கர்த்தரின் செளந்தரியம் அதெத்தனை பெரியதே
என் கண்கள் இராஜாவை மகிமையோடு காணுமே
– தூரத்தில் உள்ள தேசமாம் சீயோனைக் காணுமே – கர்த்தரின்