Song Tags: TPM Tamil Songs

Eppothum Naathanai Sthothari – எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

Eppothum Naathanai Sthothari

பல்லவி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

அனுபல்லவி

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி – எப்போதும்

சரணங்கள்

1. இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை – எப்போதும்

2. சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்போதும்

3. கிறிஸ்தேக நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் – எப்போதும்

4. வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும் படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் – எப்போதும்

5. தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை, மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி – எப்போதும்

6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் – எப்போதும்

Eppothum Naathanai Sthothari – Naal
Thappaamal Aandavan Por Padhaathai Panindhu
Thappaana Paadhaigalil Sikkaamal Nee Vilagi

1. Ip Poodhalathil Nee Manujanma Maaginai
Yeidhukendrullathil Ennikkaiyaai Ninai
Appaa Enappaa Endralaikka Pirandhanai – Eppothum

2. Sandaalan Aaginai Un Dhoasham Neengavaye
Saayuchya Vaalvudan Santhosham Oangavay
Mandala Vindalan Unnai Kai Thaangavay – Eppothum

3. Kristheisu Naayagan Kirubai Un Pooranam
Gembeeramaaga Nee Sol Naamochaaranam
Paricheidham Jaalam Veindaam Thaalmai Mudharkaaranam – Eppothum

4. Veettilum, Kaattilum, Veliyilum, Valiyilum
Paattilum, Padippilum, Theittilum, Selippilum,
Naattilum, Nagarilum, Gnaana Muyarchiyilum – Eppothum

5. Thamboor, Kinnarangal, Jaalar, Veenai, Miru Dhangam, Thaplaavudan Sangeedha Naadhamaai
Ambala Sithanai Anboadu Paadi Aadi – Eppothum

6. Thunbangal Soolinum Dhukkathilaalinum
Inbamarindhilein Endrae Nee Thaalinum
Kanpanjadaiya Saavukendray Nee Veelinum – Eppothum

Kartharai Padiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvome

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை – 2
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே – 2

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே – 2

1. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே – 2
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார் – 2 (…இயேசு)

2. போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க – 2
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார் – 2 (…இயேசு)

3. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த – 2
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார் – 2 (…இயேசு)

4. சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே – 2
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் – 2 (…இயேசு)

Karththarai Paadiye Pottriduvome
Karuththudan Thudhippom Iniya Naamamadhai – 2
Kadalin Aazham Pol Karunaiyodirakkam
Karai Illai Avaranbu Karaiyattradhe – 2

Yesu Nallavar Yesu Vallavar
Yesuvai Pol Veru Nesarillaiye – 2

1. Kodumaiyor Seeral Peruvellam Pola
Adikkaiyil Modhiye Madhilgalin Meedhe – 2
Belanum Ivvezhaikkum Eliyorkkum Dhidanaai
Veyilukku Odhungum Vin Nizhalumaanaar – 2 (…Yesu)

2. Poraattam Sothanai Ninthai Avamaanam
Koramaai Vanthum Kirubaiyil Nilaikka – 2
Deva Kumaaranin Visuvaasaththaale Naan
Jeeviththu Sevikka Thidamaliththaar – 2 (…Yesu)

3. Kallum Mullugalulla Kadina Paadhaiyile
Kalakkangal Nerukkangal Agamadhai Varuththa – 2
Ellaiyilla Edhir Emakku Vandhaalum
Vallavar Yesu Nam Mun Selgiraar – 2 (…Yesu)

4. Seeyonil Sirappudan Serththida Yesu
Seekkiram Varum Naal Nerungi Vandhiduthe – 2
Mugamugamaagave Kaanbome Avarai
Yugayugamaagave Vaazhndhiduvom – 2 (…Yesu)

Sthotharipaen Sthotharipaen – ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Sthotharipaen
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்