Song Category: Tamil

Ennai Kaakum Karthar – எனைக்காக்கும் கர்த்தர்

Ennai Kaakum Karthar

எனைக்காக்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எனைத்தாங்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எல்லாமே நீர்தானய்யா (2) என்

1. வனாந்திர பாதைகளில் தனித்து அலைந்தபோது
பாதை காட்டும் தூதனாக முன் நடந்து சென்றீர்
தேவைகள் எல்லாம் பெருகின போதும்
என் தேவைகள் எல்லாம் சந்தித்தீரே
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

2. பாரங்கள் தாங்காது தவித்து நின்றபோது
என் பாரங்கள் எல்லாம் நீர் சுமந்து கொண்டீர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டபோதும்
என் நம்பிக்கை நீரே என்றறியச்செய்தீர்
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார்

Sarva Valla Devan Piranthar
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார்
இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார்
மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார்
வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார்
சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார்
சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார்
வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார்
நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார்
தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில்

Irul Soolnthidum Paathaigalil

இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்

அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்

1. எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (2)

2. எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (2)

3. எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)

Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி

Nadathina Vitham Ninanithaal
நடத்தின விதம் நினைத்தால் நன்றி சொல்லாமல் இருப்பேனோ (2)

கடந்து வந்த பாதை எல்லாம் கரம் பற்றி நடத்தினீரே (2) கண்ணீர் துடைத்து என் கவலைகள் நீக்கி (2) (நடத்தின)

வாழ்க்கை என்னும் ஓடத்திலே தனிமையில் சென்ற போது (2) தைரியம் தந்து உன் வசனம் தந்து (2) துக்கங்கள் நேர்ந்தபோது நொறுங்குண்டு அழுதபோது (2) மார்போடு அனணத்து ஆறுதல் தந்து (2) (நடத்தின)

Enthan Raaga Thalaivanae – எந்தன் ராக தலைவனே

Enthan Raaga Thalaivanae
எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

என் நேசர் அழகு … என் ராஜா அழகு …
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிருங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை நீர் விரும்புகிறீர்

வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும் நீர்தெரிந்தெடுத்தீர்

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே

எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

Thenilum Inimaiyae Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

Thenilum Inimaiyae Yesuvin
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்

ஆகாரம் தரும் அதி மதுரம்- உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்

Jeeviyamae Orae Jeeviyamae – ஜீவியமே ஒரே ஜீவியமே

Jeeviyamae Orae Jeeviyamae
ஒரே ஒரு வாழ்க்கை
ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம்
அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும்
தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால்
பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் – ஜீவியமே

2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும், புலம்பலும்
உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் – ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர் துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை – ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் – ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே
கொண்டு வாழ்வேன் என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் – ஜீவியமே

Nambikai Veen Pogathu – நம்பிக்கை வீண் போகாது

Nambikai Veen Pogathu, Nambikai Veen Pogathu

Unnai Padaithavar Unnai Nadathuvar Unnai Azaithavar Unnai Nadathuvar

Thaien Karuvil Unnai Kandar Unnai Vittu Vilaga Mattar Nee Pogum Idamellam Unnai Kakka Kuda Varuvar – Nambikai

Thanthai Pola Unnai Sumapar Thayai Pola Unnai Theatruvar Unn Theavaigal Yethu Vendru Visarithu Unaku Tharuvar – Nambikai

Pagalil Veilea Aanalum Iravil Nilavea Aanalum Unnai Seadha Paduthathu Unnai Kakka Kuda Varuvar – Nambikai

Unmmai Ullavan – உண்மை உள்ளவன்

Unmmai Ullavan

உண்மை உள்ளவன்
என்று நினைத்து
ஊழியங்களை தந்தீரையா
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
உம் சித்தம் செய்வேன் ஐயா

உம்மை வாழ்த்துவேன்
இயேசு இராஜனே உம்மைபோற்றுவேன் எஜமானனே ….

தாயின் கருவினிலே
என்னைகண்ட தேவன் நீர்
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்

இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே

கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த பாத்திரமாய்
குயவன் நீர் வந்தீரே
அள்ளி என்னை சேர்த்தீரே
உமக்கான திட்டமதை
என்னில் வைத்து

தட்டி தட்டி வனணகின்றீர் உமக்காவே
குயவனே பரம குயவனே
வணையுமே …..
எம்மை வணையுமே

Daivam Thaanna Daanam – ദൈവം തന്ന ദാനമത്രെ

Daivam Thaanna Daanam
ദൈവം തന്ന ദാനമത്രെ
എന്റെ ജീവിതം (2)
തകർച്ചകളോ ഹാനികളോ (2)
ഒട്ടും ഏശാതെന്നേ
വഴിനടത്തും (2)

കഷ്ടനഷ്ടമേറിടുന്ന വേളകളിൽ
വ്വൈഷ്യമങ്ങൾ ഏറിടുന്ന യാത്രകളിൽ (2)
ദൂതന്മാർ രാപകൽ വഴികാട്ടിയായി
വാഗ്ദത്തങ്ങൾ നിറവേറാൻ സമയമായി (2)

സൂര്യചന്ദ്രനക്ഷത്രങ്ങൾ കാണാതെയും
ആശയൊക്കെ അറ്റുപോയ നേരങ്ങളിൽ (2)
ദൂതന്മാർ രാപകൽ വഴികാട്ടിയായി
വാഗ്ദത്തങ്ങൾ നിറവേറാൻ സമയമായി (2)

വഴിയേതെന്നു അറിയാതെ അലഞ്ഞനേരം
കരക്കടുപ്പിക്കുവാൻ എൻ നാഥനുണ്ട് (2)
ദൂതന്മാർ രാപകൽ വഴികാട്ടിയായി
വാഗ്ദത്തങ്ങൾ നിറവേറാൻ സമയമായി (2)
തകർച്ചകളോ ഹാനികളോ (2)
ഒട്ടും ഏശാതെന്നേ
വഴിനടത്തും (2)