உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே
1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி
2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி
Naan En Nesarudaiyavan
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்
1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்
2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்
3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்
4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்
Naan en naesarudaiyavan en naesar ennudaiyavar
Saaroanin roajaa pallthaakkin leeli
Ivarae en naesar ivarae en sinaegithar
Ivarae en piriyamaanavar
நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்
Uyirtheluntha Naam Yesu
உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம் -2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்