All Songs by Helen Sathya

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

Anbu Yesuvin Anbu Enthan
அன்பு இயேசுவின் அன்பு
எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
அன்பை நான் என்றும் விடேன்

1. பாவியாக இருக்கையிலே
பாரில் என்னை தேடிவந்த
பாரில் என்னை தேடி வந்தார்
பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
பரிசுத்த தேவ அன்பே

2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார்
மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
மாபெரும் அன்பிதுவே

3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
எந்தன் ஜீவனும் இயேசு தானே
அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
அவரென்னை எறிகின்றார்