வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
வெற்றியாய் நடத்திடுவார் இயேசு ராஜா
வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
என் தோல்வியெல்லாம் வெற்றியாகுமே (4)
திறந்த வாசலை உனக்கு முன்பாக
வைத்திருக்கும் தேவனவர்
வெண்கலத் தாழ்ப்பாள்களை
உடைத்தெறிந்து நுழையச் செய்வார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்
தேவனாயிருக்கிற கர்த்தர் தாமே
வலது கையை பிடித்து என்னை
பயப்படாதே நான் உனக்கு துணையாய்
நிற்கிறேன் என்று சொன்னார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்
வியாதியை நீக்கும் தேவனவர்
வியாதியை நீக்கி சுகமாக்குவார்
கிறிஸ்துவின் நாமத்தினால்
சுகத்தைப் பெற்று துதி செலுத்துவேன்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா
ஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியா
இருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியா
அந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே
1. ஊழியம் செய்திடவே எழும்பிடுவோம்
திரள் திரளாய் ஆத்துமாக்கள் சேர்த்திடுவோம்
தெய்வ பக்தி கொண்ட மக்கள் இந்தியர்களே
ஜீவனுள்ள தேவனை அறியச் செய்திடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
2. அழிகின்ற ஆத்துமாக்கள் ஏராளமே – இயேசுவை
அறியாமல் நரகம் செல்வோர் ஏராளமே
இயேசுவால் இரட்சிப்பு என்று முழங்கிடுவோம்
அவர் இரத்தத்தில் மன்னிப்பு உண்டு சொல்லிடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
1. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் – அல்லேலூயா
2. அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார் – அல்லேலூயா
3. அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது
அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது – அல்லேலூயா
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவே எந்தன் பரிகாரி
இயேசுவே எந்தன் வல்ல மீட்பர்
இயேசுவே எந்தன் மகா ராஜா
இயேசுவே எந்தன் மேய்ப்பர் அவர்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா