Karthar Enakai Yavaiyum
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர்
2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர்