All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Unnatharae En Nesarae – உன்னதரே

Unnatharae En Nesarae
உன்னதரே என் நேசரே-உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்த நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்
3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு
4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை

Thadukki Vizhunthora
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை
1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உம்நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்
3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்
5. உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்

Ummai Naadi Theyedum Manithar – உம்மை நாடி தேடி

Ummai Naadi Theyedum Manithar
உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் , கனமும், தூயோனே உமக்கே
1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்
2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான்
என்சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்
3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு
4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்

Kavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள்

Kavalai Kollathirungal
கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)
2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா
3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ

Amarndhirupaen Aruginilae – அமர்ந்திருப்பேன்

Amarndhirupaen Aruginilae
அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்

Amarndhirupaen aruginilae
Saaindhirupaen um thoalinilae
Yaesayyaa en naesarae
Anbu koorndheer jeevan thandheer

Naesikkiraen ummaiththaanae
Ninaivellaam neerthaanaiyaa
Thudhipaadi magizhndhirupaen
Uyirulla naalellaam

Anbu Kuruven Innum Athigamai – அன்பு கூறுவேன்

Anbu Kuruven Innum Athigamai
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா

Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai

Muzhu ullathoadu aaraadhipaen
Muzhu belathoadu anbu Kooruvaen
Aaradhanai Aaradhanai

1.Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae – Ummai

2.Elroyee elroyee
Ennai kandeerae nandri aiyaa – Ummai

3.Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nandri aiyaa – Ummai

Ummaiyae Naan Neseipaen – உம்மையே

Ummaiyae Naan Neseipaen
உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – உம்
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதி
தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை

Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து

Neethiyil Nilaaithirunthu
நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா
2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு

Yen Valvin Muloo Yekamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா – 4
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வது தான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான்
நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்-2
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே

Ummunae Yepothum Neraivaana
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறுயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்து நீரே
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது