All Songs by Fr. S. J. Berchmans

Munnorgal Um Methu முன்னோர்கள் உம் மீது

Munnorgal Um Methu
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் – 2
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் – 2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால்

Neer Ennai Thaanguvathaal
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய் -2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான் -என் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

2. கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும் -2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

3. இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை -2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

Neer Ennai Thaanguvathaal
Thoonguven nimmathiyaay -2
Paduththurangi vizhiththezhuven
Karththar ennai aatharikkindreer -2 -Neer Ennai

1. Ethirthezhuvor perugunaalum
Karththar kai vittaar endru sonnaalum -2
Kedagam neer thaan magimaiyum neer thaan
Thalai nimira seibavar neer thaan -En -2

Paduththurangi vizhiththezhuven
Karththar ennai aatharikkindreer -2 -Neer Ennai

2. Kadantha naatkalil nadantha kaariyam
Ninaiththu thinam kalanginaalum -2
Nadanthathellam nanmaikkethuvai
En thakappan neer matrukireer -2

Paduththurangi vizhiththezhuven
Karththar ennai aatharikkindreer -2 -Neer Ennai

3. Indru kangindra egipthiyarai
Ini oru bothum kanbathillai -2
Karthar enakkaai yuththam seigindraar
Kaaththiruppen naan porumayudan -2

Paduththurangi vizhiththezhuven
Karththar ennai aatharikkindreer -2 -Neer Ennai

Pagal Nera Paadal Neerae – பகல் நேரப் பாடல் நீரே

Pagal Nera Paadal Neerae
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்

3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்

4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்

Yerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை

Yerusalem Yerusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார்.

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல்
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார்
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள்

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான்
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Yerusalem Yerusalem Unnai with Bible Verses

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Yakobin Devan Thunaiyaar – யாக்கோபின் தேவன் துணையானார்

Yakobin Devan Thunaiyaar

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5
தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்

 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
  அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6
  நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
  நமக்குள் வாழ்கிறார்
 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
  மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10
  அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
  ராஜாரீகம் செய்கின்றார்
 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
  கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
  சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9
  திக்கற்ற பிள்ளைகளை
 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
  பசியுற்றோரை போ~pக்கின்றார்
  ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9
  நியாயம் செய்கின்றார் (நீதி)

Muguntha Aanantham – மிகுந்த ஆனந்தம்

Muguntha Aanantham

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1

 1. ஆத்துமா தேற்றுகிறார்
  புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
  நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
  நித்தமும் நடத்துகின்றார்
 2. எதிரிகள் கண்முன்னே
  விருந்து படைக்கின்றார்
  புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
  நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
  கிருபை என்னைத் தொடரும்
  நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
  உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
 4. புல்லுள்ள இடங்களிலே
  இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
  அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
  அனுதினம் நடத்துகின்றார்
 5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
  நடக்க நேர்ந்தாலும்
  தகப்பன் என்னோடு இருப்பதனால்
  தடுமாற்றம் எனக்கில்லையே

Anbu Kuruntha En Yesuvinal – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

Anbu Kuruntha En Yesuvinal

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

 1. எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
  எனக்கு எதிராய் யார் இருப்பார்?
  மகனையே தந்தீரையா
  மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
 2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
  குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
  நீதிமானாய் மாற்றினீரே
  தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
 3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
  எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
  பரலோகத்தில் தினம் எனக்காய்
  பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
 4. நிகழ்வனவோ வருவனவோ
  வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
  முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
  வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
 5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
  முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
  சகலமும் நன்மைக்கே
  நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28

Hand of God En Melae – Hand of God என் மேலே

Hand of God என் மேலே
Hand of God என்மேலே எஸ் 7:6
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31

 1. மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41
  தொட்டு சுகம் தந்த கரம்
  நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13
  நிமிரச் செய்த நேசர் கரம்
 2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11
  பெருகச் செய்த அற்புத கரம்
  வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14
  பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
 3. தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41
  மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
  வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51
  ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
 4. எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15
  இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
  இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46
  ஓட வைத்த தேவ கர
 5. ம்

Rajavagiya Yen Devane – இராஜாவாகிய என் தேவனே

Rajavagiya Yen Devane

இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

 1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
  துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
  துதி உமக்கே கனம் உமக்கே
  மகிமை உமக்கே என்றென்றைக்கும்
  உமக்கே (3) ஸ்தோத்திரம்
  உயிருள்ள நாளெல்லாம்
 2. எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
  எல்லாருக்கும் நன்மை செய்பவர்
  உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
  பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
 3. நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
  ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
  கையை விரித்து சகல உயிர்களின்
  விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
 4. வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
  கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
  நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
  அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
 5. அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
  கண்காணிப்பாய் இருக்கின்றீர்
  பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
  வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
 6. தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
  தாங்கி தாங்கி நடத்துகிறீர்
  தாழ்த்தப்பட்ட அனைவரையும்
  தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

Agila Ullagam Nambum – அகில உலகம் நம்பும்

Agila Ullagam Nambum

அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்

 1. என் செல்வம் என் தாகம் சங்.16:2
  எல்லாமே நீர்தானே
  எனக்குள் வாழ்பவரே
  இதயம் ஆள்பவரே – என் நேசர்
 2. பாவங்கள் நிவிர்த்தி செய்ய
  பலியானீர் சீலுவையிலே 1யோவா4:10
  பரிந்து பேசுபவரே
  பிரதான ஆசாரியரே எபி 7:25-26
 3. வல்லமையின் தகப்பனே
  வியத்தகு ஆலோசகரே
  நித்திய பிதா நீரே
  சமாதான பிரபு நீரே ஏசா.9:6
 4. உம் சமூகம் ஆனந்தம்
  பரிபூரண ஆனந்தம்
  பேரின்பம் நீர்தானே சங்.16:11
  நிரந்தர பேரின்பமே
  1. என் இதயம் மகிழ்கின்றது
   உடலும் இளைப்பாறுது
   காக்கும் தகப்பன் நீரே சங்.16:9
   பரம்பரை சொத்து நீரே