Song Tags: Jebathotha Jeyageethangal Vol 40

Aathumavae Kartharaiye Nokki – ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

Aathumavae Kartharaiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு -2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான் -2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம் -2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

3. பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார் -2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

4. கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம் -2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

5. நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா -2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது

Aathumaavae Karththaraiye
Nokki Amarnthiru -2
Naan Nambuvathu Kartharale
Varumae Vanthidumae -2 -Aathumaavae

1. Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

2. Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
Vaathai Anugathu Theengu nearidathu

3. Paazhakkum Kollai Nooi Mearkollamal
Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
Sirakin Nilalilae Moodimaraikintraar

3. Karthar Namathu Adaikalam Pugalidamanaar
Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
Sothanai Jeyippom saathanai Padaippom

4. Namathu Devan Entratraikkum Sathakaalamum
Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
Erakkamullavar Nam Idhayam Aazhbavar

Vizhundhu Pogaamal – விழுந்து போகாமல்

Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை

1. மகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் -உம்
மாசற்ற மகனாக (மகளாக)
நிறுத்த வல்லவரே

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்

3. மெய் ஞானம் நீர்தானையா
இரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா

Vizhundhu Pogaamal
Thadukki Vilamal
Kaakka Vallavare
Thinamum Kappavare

Umakke Umakke
Magimai Maatchimai

1. Magimaiyin sannithaanathil
Miguntha Magilchiyudan – Um
Maasattra Maganaga (Magalaga)
Nirutha Vallavare

2. Adikaaram Vallamai
Ganamum Magathuvamum
Ippothum Eppothumae
Umakke Uriththagattum

3. Mei Gananam Neerthanaiya
Ratchakarum neerthanaiya
Meetparum Neerthanaiya
En Meipparum Neerthanaiya

Kaarunyam Ennum – காருண்யம் என்னும் கேடயத்தால்

Kaarunyam Ennum
காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர் -2

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால் -2
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் -2 -காருண்யம்

1. (உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் -2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் -2 -எதிர்கால

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் -2
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன் -2 -எதிர்கால

3. உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே -2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் -2 -எதிர்கால

Kaarunyam Ennum
Keadayaththaal Kaathukollukinteer
Karthavae Neethimaanai
Aasirvathikintreer -2

Ethir Kaala Bayamillayae
Neer Enakkul Iruppathaal -2
Yethai Kurithum Kalakamillai
Enakkullae Irupathanaal -2 -Kaarunyam

1. Nambum Manithar Santhosamaai
Magiluvdan Paaduvaargal -Ummai -2
Avarkalai Neer Kappattruveer
Anudhinamum Kaividamal -2 -Kaarunyam

2. Therinthukondeer Umakontru
Athai Naan Arinthukondean -2
Neethiyulla Baliseluthi Ummaiyae
Naan Saarthukondean -2 -Kaarunyam

3. Ulagam Tharukintra Magilvaivida
Mealana Maglichi Neerae -2
Samathanathaal Niruppkireer
Sugan Thanthu Nadathukireer -2 -Kaarunyam

Balipeedamae Balipeedamae – பலிபீடமே பலிபீடமே

Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே-2
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே

1. பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான
பரலோக பலிபீடமே-2
இரத்தம் சிந்தியதால்
இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே -2 -பலிபீடமே

2. மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே -2
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே – 2 -பலிபீடமே

3. ஈட்டியால் விலாவில்
எனக்காக குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே -2
இரத்தமும் தண்ணீரும்
புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன் -2 -பலிபீடமே

4. எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே -2
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே -2 -பலிபீடமே

Balipeedamae Balipeedamae
Karaikaigal Pokkidum
Kanneergal Thudaithidum
Kalvaari Balipeedamae

1. Paava Nivirthi seiya
Parikaara Baliyana
Paraloga Balipeedamae
Ratham Sinthiyathaal
Ilavasamaai Meetpu Thantha
Ratchar Balipeedamae -2 -Balipeedamae

2. Manniyum Manniyum Entru
Manathaara Purinthu Pesum
Magimaiyin Balipeedamae
Eppothum Vanthadaiya
Erakkam Sahayam Pera
Yettra Balipeedamae -2 -Balipeedamae

3. Eettiaal Vilaavil
Enakaga Kuththappatta
En Nesar Balipeedamae
Rathamum Thanneerum
Purappatta Jeeva Nathiyaai
Eppadi Naan Nantri Solluvean -2 -Balipeedamae

4. Ellaam Mudinthathentru
Aanaithaiyum Seithumuditha
Adisaya Balipeedamae
Oppadaithean Aaviyai
Entru Solli Arpanitha
Opptra Balipeedamae -2 -Balipeedamae

Kalangum Naeramellam – கலங்கும் நேரமெல்லாம்

Kalangum Naeramellam
கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே -2

1. ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே -2
கூப்பிடும்போதெல்லாம்
பதில் தருபவரே -2

யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் -2
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம் -2

2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே -2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே -2 -யெகோவா ராஃப்பா

3. பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
நோய்கள் சுமந்துகொண்டீர் -2
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால் -2 -யெகோவா ராஃப்பா

4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை -2
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர் -2 -யெகோவா ராஃப்பா

Kalangum Naeramellam
Kanneer Thudaipavare
Jebam Ketpavare
Sugam Tharubavare -2

1. Aabaththu Naatkalilae
Adisayam Seibavarae
Kooppidum Pothellam
Bathil Tharubavare

Yehova Raffha
Sugam Tharum Thagappan
Umakkae Sthothiram
Uyirulla Naalellam

2. Thollaigal Suzhnthirukukaiyil
Thunaiyaai Varubavarae -2
Vallamai Valakarathaal
Viduthalai Tharubavarae -2 -Yehova Raffha

3. Belaveenam Yettrukondeer – En
Nooigal Sumanthukondeer – En -2
Sugamanean Sugamanean
Ratchakar Thazhumbugalaal – En -2 -Yehova Raffha

4. Ummaiyae Nambuvathaal – Naan
Aasaikapaduvathillai -2
Sagalamum Nanmaiku Yethuvaai
Thagappan Nadathikireer -2 -Yehova Raffha

Pillai Naan Deva Pillai Naan – பிள்ளை நான் தேவ பிள்ளை நான்

Pillai Naan Deva Pillai Naan
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
இனி பாவம் செய்வது இல்ல -2

1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு -2
(நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை -2
அவருக்குள் வாழ்கின்றேன் -2

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே -2 -பிள்ளை நான்

2. ஒரே ஒருதரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் -2
பரிசுத்தமாக்கப்பட்டேன் -2
இறைமகனா(ளா)கிவிட்டேன் -2 -அல்லேலுயா

3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன் குறித்தீரே என்னை -2
குற்றமற்ற மகனா(ளா)க -2
தூய வாழ்வு வாழ -2 -அல்லேலூயா

4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் -2
திரைச்சீலை கிழிந்தது அன்று -2
நுழைந்தோம் உம் சமுகம் -2 -அல்லேலூயா

Pillai Naan Dhaeva Pillai Naan
Paavi Alla Paavi Alla
Paavam Seivadhu Illa
Ini Paavam Seivadhu Illa – 2

1. Kiristhuvai Patrum Visuvaasathaal
Pillaiyaanaen Pidhaavukku – 2
(Naan ) Tharithukondaen Yaesuvai
Avarukkul Vaazhgindraen

Alleluia Aanandhamae
Alleluia Paerinbamae – 2 – Pillai Naan

2. Orae Orutharam Yaesu Andru
Siluvaiyil Baliyaanadhaal – 2
Parisuthamaakappattaen – 2
Iraimaganaa(laa)givittaen – 2
– Alleluia

3. Ulagamae Andru Thoandrum Munnaal
Mun Kuritheerae Ennai – 2
Kutramatra Maganaa(laa)ga -2
Thooya Vaazhvu Vaazha – 2
– Alleluia

4. Puthiyathoar Vazhiyai Thirandhu Vaitheer
Kalvaari Siluvaiyinaal – 2
Thiraicheelai Kizhindhadhu Andru – 2
Nuzhaindhoam Um Samugam – 2
– Alleluia

Ummakuthan Ummakuthan – உமக்குதான் உமக்குதான்

Ummakuthan Ummakuthan
உமக்குதான் உமக்குதான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் -5

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக -2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும் -2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

3. உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை -2
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை -2

பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான்

Ummakuthan Ummakuthan
Yesaiyya En Udal Umakkuthaan -5

1. Oppukoduthean En Udalai
Parisutha Paliyaga -2
Umakugantha Thooimaiyana
Jeeva Paliyaai Tharukintrean -2

Parisutharae Parisutharae -2 -Ummakuthan

2. Kangal Itchai Udal Aasaigal
Ellamae Ozhinthu Pogum -2
Umathu Siththam Seivathuthaan
Entrantraikkum Nilaithirukum -2

Parisutharae Parisutharae -2 -Ummakuthan

3. Ulaga Pokkil Nadappathillai
Oththa Vesam Tharipathillai -2
Theettanathai Thoduvathillai
Theengu Seiya Ninaipathillai -2

Parisutharae Parisutharae -2 -Ummakuthan

Valaigal Kizhiyathakka – வலைகள் கிழியத்தக்க

Valaigal Kizhiyathakka
வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம் -2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம் -2

1. இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர் -2
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே -2
இயேசுதான் இரட்சகர் என்று -2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம் -2
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம் -2 -வலைகள்

2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய் -2
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும் -2
அன்றாடம் நடந்திடுமே -சபையிலே -2 -ஒருமனமாய்

3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம் -2
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல -2
என்று நாம் முழங்கிடுவோம் -2 -ஒருமனமாய்

Valaigal Kizhiyathakka
Padauvgal Amizhathakka
Koottalikku Kodukkathakka
Meengal Kaanbom -2

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom -2

1.Yesu thaan Ratchakar
Yesu than Ulagin Meetpar -2
Nam Desam Ariyanumae
Naauvgal Sollanumae -2
Yesu tha an Ratchakar Entru -2

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom -2
Aazha Kadalilae
Athikamaai Maan Pidippom -2 -Valaigal

2. Sthevaan Seithaar Arputhangal
Vallamaiyaal Niranthavaraai -2
Nizhal Pattal Athisayamum
Aadai thottal udal sugamum -2
Antraada Nadanthidumae -Sabaiyilae -2 -Orumanamaai

3. Aaviyinaal Niranthiduvom
Pethuru Pol Arikkai Seivom -2
Manithar Meetpadaya Veru Naamamillai -2
Entru Naam Muzhankiduvom -2 -Orumanamaai

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Ennai Kaanbavarae – என்னைக் காண்பவரே

Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

நன்றி ராஜா இயேசு ராஜா

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்

கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்

Ennai Kaanbavarae
Thinam Kaappavare

Aarainthu Arinthirukintreer
Suttri Suttri Sozhinthirukinteer
Naan Amarvathum Naan Muzhuvathum
Nantraai Neer Arinthirukintreer

Ennangal Yeakkangal Ellam
Ellamae Arinthirukintreer
Nadanthalum Paduthaalum
Appa Neer Arinthirukintreer

Nantri Raja Yesu Rajah

Munnum Pinnum Nerukki Nerukki
Suttri Ennao Sozhinthrukindeer
Adisayamai Pirrammikathakka
Pakkuvamaai Uruvakineer