Song Tags: Fr. Berchmans Tamil Cross Songs

Appa Um Patham – அப்பா உம் பாதம்

Appa Um Patham
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி
கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்
போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன் – இயேசையா – 4

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி – 4

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Kalvari Nayagane – கல்வாரி நாயகனே

Kalvari Nayagane
கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே

4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Kalvari Nayagane Kannkalil Nirainthavarae
Karampitiththavarae Kaividaa Kanmalaiyae
Umakkae Sthoththiram – 2
Uyirulla Naalellaam
Umakkae Sthoththiram

1. Ennai Iluththuk Kollum
Oti Vanthiduvaen
Araikkul Alaiththuch Sellum
Anpil Kalikooruvaen

2. Thiraatchaை Irasampaarkkilum
Inimaiyaanavarae
Oottunnda Parimalamae
Ulakellaam Um Manamae

3. Idakkaiyaal Thaangukireer
Valakkaiyaal Thaluvukireer
Enakku Uriyavarae Ithayam Aalpavarae

4. Um Meethu Konnda Naesam
Akkini Jeevaalaiyanto
Thannnneerum Vellangalum
Thannikka Mutiyaathaiyaa

Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே

Manathurugum Deivame
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா

2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா

3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா

4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்

5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

Manathurugum Deivame
Manathurukum Theyvamae Iyaesaiyaa
Manathaarath Thuthippaen Sthoththarippaen
Neer Nallavar Sarva Vallavar
Um Irakkaththirku Mutivae Illai
Um Anpirku Alavae Illai
Avai Kaalaithorum Puthithaayirukkum

1. Meyyaaka Engalathu
Paadukalai Aettuk Konndu
Thukkangalai Sumanthu Konnteer – Iyaa

2. Engalukku Samaathaanam
Unndupannnum Thanndanaiyo
Ummaelae Vilunthathaiyaa – Iyaa

3. Saapamaana Mulmutiyai
Thalaimaelae Sumanthu Konndu
Siluvaiyilae Vetti Sirantheer – Iyaa

4. Engalathu Meeruthalaal
Kaayappattir Norukkappattir
Thalumpukalaal Sukamaanom – Unthan

5. Thaetivantha Manitharkalin
Thaevaikalai Arinthavaraay
Thinam Thinam Arputham Seytheer – Iyaa