All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை

Andavar Allugai Seikirar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்
2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்
3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்

Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம்

Paaduvoom Magilvoom Kondaduvom
பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி

2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா

3. கல்வாரி சிலுவையினால் -என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா

4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே

5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் -என்
உயிரான கிறிஸ்து வந்ததால் -உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

Ummai Pugalinthu Paaduvathu Nallathu – உம்மைப் புகழ்ந்து

Ummai Pugalinthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது – 2
2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா
3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

Mugamalarinthu Kodupavarai Karthar – முகமலர்ந்து கொடுப்பவரை

Mugamalarinthu Kodupavarai Karthar
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

Thiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்

Thiruthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்

பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம் – 2

1. ஐந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச் செய்தார் – 2
ஐயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார் – 2 (…பாடி)

2. பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே – 2
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே – ஒரு – 2 (…பாடி)

3. காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார் – 2
கற்பாறையை பிளந்து
தண்ணீர்கள் ஓடச்செய்தார் – 2 (…பாடி)

4. நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார் – 2
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார் – 2 (…பாடி)

5. கெம்பீர சத்தத்தோடு
ஆரவார முழக்கத்தோடு – 2
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார் – 2 (…பாடி)

6. துதிக்கும்போதெல்லாம்
சுவையான உணவு அது – 2
ஆத்மா திருப்தியாகும்
ஆனந்த ராகம் பிறக்கும் – 2 (…பாடி)

Thirupthiyaakki Nadaththiduvaar
Thevaikalai Santhippaar
Meetham Edukka Vaippaar
Pirarukku Kodukka Vaippaar

Paadi Kondaaduvom
Kodi Nandri Solluvom – 2

1. Ainthu Appangalai
Aayiramaay Perukach Seythaar – 2
Aiyaayiram Aankalukku
Vayiraara Unavaliththaar – 2 (…Paadi)

2. Ponnodum Porulodum
Purappadach Seythaare – 2
Palaveenam Illaamale
Paathukaaththu Nadaththinaare – Oru – 2 (…Paadi)

3. Kaadaikal Varavazhaiththaar
Mannaavaal Unavaliththaar – 2
Karpaaraiyai Pilanthu
Thanneerkal Odachcheythaar – 2 (…Paadi)

4. Neediya Aayul Thanthu
Niraivodu Nadaththiduvaar – 2
Muthir Vayathaanaalum
Pasumaiyaay Vaazhach Seyvaar – 2 (…Paadi)

5. Kembeera Saththaththodu
Aaravaara Muzhakkaththodu – 2
Therinthu Konda Tham Makkalai
Thinamum Nadaththi Sendraar – 2 (…Paadi)

6. Thuthikkumpothellaam
Suvaiyaana Unavu Athu – 2
Aathmaa Thirupthiyaakum
Aanantha Raagam Pirakkum – 2 (…Paadi)

Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

Aravaram Arpattam Appa
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
நன்றிபாடல் தினமும் பாடுவோம்
நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்
1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
2. கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்கு சொந்தமானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்
3. உயிர்த்த கிறி;ஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்
4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்

Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum Naathaa
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ

Nambikkaiyinaal Nee
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
4. கட்டாந்தரையிலே நடப்பது போல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே

Ummai Naan – உம்மை நான் போற்றுகிறேன்

Ummai Naan
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ
புகழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
2. மாலைநேரம் அழுகையென்றால்
காலை நேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்
தயவோ வாழ்நாளெல்லாம்
3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4. மலைபோல் நிற்கச் செய்தீர்
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின்முகம் மறைந்தபோது
5. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மெய் தீபமே
6. புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா
எனக்குத் துணையாய் இரும்