All Songs by david

Kalangalaiyum Nerangalaiyum – Manam Thirumbu Indre Thirumbu – காலங்களையும் நேரங்களையும்

Kalangalaiyum Nerangalaiyum

காலங்களையும் நேரங்களையும்
வீணாக நீ கழித்திடாதே
ஜீவன் தந்த தேவனுக்கு
நேரம் இல்லை என்று சொல்லி விடாதே – 2

மனம் திரும்பு(வோம்) இன்றே திரும்பு(வோம்) (4)

1. செல் போன் பார்க்க நேரமிருக்கு
செல்பி எடுக்க நேரமிருக்கு – 2
சிலுவை சுமந்து மீட்டவரை
தேடிட உனக்கு சிந்தை இல்லையோ – 2 (…மனம்)

2. ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு
உண்ட மயக்கம் என்றும் (டெய்லி) உண்டு – 2
சண்டே மட்டும் இயேசு போதுமோ
மண்டே ஆனா உலகம் வேண்டுமோ – 2 (…மனம்)

3. சொந்த வீடு கட்ட பணம் இருக்கு
இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு – 2
ஆஸ்திகளாலே கர்த்தருக்கு
ஊழியம் செய்திட மனம் இல்லையோ – 2 (…மனம்)

4. மேக் அப் போடும் மை டியர் சிஸ்டர்
அழகாய் டிரஸ் பண்ணும் மை டியர் பிரதர் – 2
உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை
கண்டும் காணாமல் இருப்பது ஏன் – 2 (…மனம்)

5. கிரிக்கெட் பார்க்கும் கிறிஸ்தவனே
கிருபையின் காலத்தை வீணாக்காதே – 2
சண்டை போடும் கிறிஸ்தவனே
சத்திய வேதம் மறந்திடாதே – 2 (…மனம்)

6. பட்டம் பதவி ஆசை பெருகுது
ஹோலி லைப் காலியாகுது – 2
நூதன போதனை கவர்ந்திழுக்குது
ஆதி அன்பு பறிபோகுது – 2 (…மனம்)

7. புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ
சும்மா சுற்றுலா நியாயமாகுமோ – அண்ணேன் – 2
சினிமா சீரியல் தகுதியாகுமோ
சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ – அக்கா – 2 (…மனம்)

8. நற்செய்தி அறிவிக்கும் காலமிது
ஆத்தும அறுவடை நேரமிது – 2
இயேசு வருகின்றார் ஆயத்தப்படு
நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு – சபையே – 2 (…மனம்)

9. எழுப்புதல் காலம் வந்துவிட்டது
தேசங்கள் இயேசுவை அறியப்போகுது – 2
இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே
எழுந்து எரிந்து ஒளி வீசிடு – 2 (…மனம்)

Kalangalaiyum Nerangalaiyum
Veenaaga Nee Kazhiththidaathe
Jeevan Thantha Devanukku
Neram Illai Endru Solli Vidaathe – 2

Manam Thirumbu(Vom) Indre Thirumbu(Vom) (4)

1. Cell Phone Paarkka Neramirukku
Selfie Edukka Neramirukku – 2
Siluvai Sumanthu Meettavarai
Thedida Unakku Sinthai Illaiyo – 2 (…Manam)

2. Ookkam Niraintha Thookkam Undu
Unda Mayakkam Endrum (Daily) Undu – 2
Sunday Mattum Yesu Pothumo
Monday Aana Ulagam Vendumo – 2 (…Manam)

3. Sontha Veedu Katta Panam Irukku
Innum Soththu Serkka Aasai Irukku – 2
Aasthikalaale Karththarukku
Ooliyam Seithida Manam Illaiyo – 2 (…Manam)

4. Make-Up Podum My Dear Sister
Azhagaai Dress Pannum My Dear Brother – 2
Ullaana Vaazhvin Alangolaththai
Kandum Kaanaamal Iruppathu Yen – 2 (…Manam)

5. Cricket Paarkkum Kiristhavane
Kirubaiyin Kaalaththai Veenaakkaathe – 2
Sandai Podum Kiristhavane
Saththiya Vetham Maranthidaathe – 2 (…Manam)

6. Pattam Pathavi Aasai Peruguthu
Holy Life Kaaliyaaguthu – 2
Noothana Pothanai Kavarnthizhukkuthu
Aathi Anbu Paripoguthu – 2 (…Manam)

7. Punitha Payanam Unnai Punithamaakkumo
Summaa Suttrulaa Nyaayamaagumo – Annen – 2
Cinema Serial Thaguthiyaagumo
Sittrinbam Unnai Vaazhaveikkumo – Akkaa – 2 (…Manam)

8. Narseithi Arivikkum Kaalamithu
Aaththuma Aruvadai Neramithu – 2
Yesu Varukindraar Aayaththappadu
Niththiya Vaazhvai Ethirnokkidu – Sabaiye – 2 (…Manam)

9. Ezhupputhal Kaalam Vanthuvittathu
Thesangal Yesuvai Ariyappoguthu – 2
Intha Kaalaththil Mounam Kollaathe
Ezhunthu Erinthu Oli Veesidu – 2 (…Manam)

Ennodu Kooda Neenga Irukanum – என்னோடு கூட நீங்க இருக்கணும்

Ennodu Kooda Neenga Irukanum

என்னோடு கூட நீங்க இருக்கணும்
என் ஜீவன் பிரியும் நாள் வரையில் – 2

என் கூடவே நீங்க இருக்கணும் (2)
உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மோடு நடக்கணும் – 2
இயேசையா எந்தன் இயேசையா (2) (…என்னோடு)

1. என் கரம் பிடித்தவர் நீர்தான்
உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் – 2
யாருண்டு எனக்கு.. உம்மைத்தவிர (2) (..என் கூடவே)

2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர்
கைவிட மாட்டேன் என்றீர் – 2
உயிருள்ள வரையில்.. என்னோடு இருப்பீர் (2) (..என் கூடவே)

3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர்
அந்நாளில் கரை சேர்த்திடுவீர் – 2
ஆசையோடு நான்.. தொடர்ந்து ஓடுவேன் (2) (..என் கூடவே)

Ennodu Kooda Neenga Irukkanum
En Jeevan Piriyum Naal Varaiyil – 2

En Koodave Neenga Irukkanum (2)
Uyirulla Naatkalellaam
Ummodu Nadakkanum – 2
Yesaiyaa Enthan Yesaiyaa (2) (…Ennodu)

1. En Karam Pidiththavar Neerthaan
Ummaththaan Nambi Vaazhkindren – 2
Yaarundu Enakku.. Ummaiththavira (2) (…En Koodave)

2. Unnai Vittu Vilagiden Endreer
Kaivida Maatten Endreer – 2
Uyirulla Varaiyil.. Ennodu Iruppeer (2) (…En Koodave)

3. Azhaiththavar Nadaththi Selluveer
Annaalil Karai Serththiduveer – 2
Aasaiyodu Naan.. Thodarnthu Oduven (2) (…En Koodave)

Ebinesare Aaraathanai – எபிநேசரே ஆராதனை

Ebinesare Aaraathanai

எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை – 2

மறப்பேனோ உமது அன்பை – நான் (2)
மண்டியிடுவேன் உம் பாதத்திலே – 2

1. எளியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா – 2
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் – 2
எனை தேடி என் பின்னே வந்தீரையா – 2 (…மறப்பேனோ)

2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமாகாமல் காத்தீரையா – 2
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே – 2
கனிவாக என்னை நீர் தேற்றினீரையா – 2 (…மறப்பேனோ)

3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே – 2
மறந்தீரோ என்று நான் அழுதேனையா – 2
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா – 2 (…மறப்பேனோ)

Ebinesare Aaraathanai
En Thunaiyaalare Aaraathanai – 2

Marappeno Umathu Anbai – Naan (2)
Mandiyiduven Um Paathaththile – 2

1. Eliyonai Kannokki Paarththeeraiyaa
Peyar Solli Ennai Azhaiththeeraiyaa – 2
Umai Vittu Engo Naan Sendrapothum – 2
Enai Thedi En Pinne Vantheeraiyaa – 2 (…Marappeno)

2. Neer En Mel Vaiththa Um Kirubaiyinaal
Nirmoolamaagaamal Kaaththeeraiyaa – 2
Kadungobaththaal Ennai Adiththaalume – 2
Kanivaaga Ennai Neer Thettrineeraiyaa – 2 (…Marappeno)

3. Irul Ennai Soozhnthitta Neraththile
Vazhi Ondrum Ariyaamal Thavikkaiyile – 2
Marantheero Endru Naan Azhuthenaiyaa – 2
Marappeno Endru Solli Anaiththeeraiyaa – 2 (…Marappeno)