Song Category: Tamil

Endha Sondhamum Endha – எந்த சொந்தமும் எந்த பந்தமும்

Endha Sondhamum Endha
எந்த சொந்தமும் எந்த பந்தமும்
உமக்கு ஈடாகுமோ
எந்த உறவும் இயேசுவே உந்தன்
அன்புக்கு இணையாகுமோ

பல்லவி
உம் அன்பு அன்பு
அன்பு குறைவதில்லை
உம் அன்பு அன்பு
அன்பு மறைவதில்லை (2)

சரணம்
1. உறவுகள் வெறுத்தாலும்
ஊரார் என்னை பகைத்தாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை
நண்பர்கள் நகைத்தாலும்
நாதியற்றுப் போனாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை – உம் அன்பு

2. வெறுமையில் தவித்தாலும்
பொறுமையை நான் இழந்தாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை
தனிமையில் வாழ்ந்தாலும்
வறுமையில் வாடினாலும் –
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை – உம் அன்பு

Endha Sondhamum Endha Bandhamum
Umakku Eedagumo
Endha Uravum Yesuvae Undhan
Anbukku Inaiyaagumo

Chorus
Um Anbu Anbu
Anbu Kuraivathillai
Um Anbu Anbu
Anbu Maraivathillai (2)

Stanza
1. Uravugal Veruthaalum
Ooraar Ennai Pagaithaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai
Nanbargal Nagaithaalum
Naadhiyatu poonaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai – Um Anbu

2. Verumaiyil Thavithaalum
Porumai naan Izhandhaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai
Thanimaiyil Vazhdhaalum
Varumaiyil Vaadinaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai – Um Anbu

Suthantharipen Naan Suthantharipen – சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்

Suthantharipen Naan Suthantharipen
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2

எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் – 2

1. உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே – 2
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ

2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

3. உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் – 2
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் – 2 – எரிகோ

Ella Namathirkum Miga Melana Namam – எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

Ella Namathirkum Miga Melana Namam
எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே
Ella Namathirkum Miga Melana Namam
Ellaa Naamaththirkum Mika Maelaana Naamam
Yesuvin Naamamae
Ellaa Thalaimuraiyum Entum Pottidum
Naamam Yesuvin Naamamae – 2

Yesu Naamamae
Jeyam Jeyamae
Saaththaanin Sakthi Ontumillaiyae (2)

Alleluia Hosannaa
Alleluia Aamen (2)

1. Paavaththilirunthu Iratchiththathae
Yesuvin Naamamae
Nithya Narakaththilirunthu Viduviththathae
Kiristhaesuvin Naamamae

2. Saaththaanin Mael Athikaaram Thanthathae
Yesuvin Naamamae
Sathru Kottakalai Thakarththerinthittathae
Kiristhaesuvin Naamamae

3. Sareera Viyaathikalai Kunamaakkuthae
Yesuvin Naamamae
Thollai Kashtangal Anaithaiyum Neekkiduthae
Kiristhaesuvin Naamamae

Jeba Aavi Enamel Utridum – ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்

Jeba Aavi Enamel Utridum
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும், ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2

ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2

1. தானியேல் போல இடைவிடாமல், ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் – 2
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2
அதிகாரம் எனக்குள் தந்திடும் – 2

2. பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் – 2
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட – 2
வல்லமை எனக்குள் தந்திடும் -2

3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் – 2
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட – 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் – 2

Meendum Paaviyaai- மீண்டும் பாவியாய்

Meendum Paaviyaai
மீண்டும் பாவியாய்
உம் சமுகத்தில் வந்துள்ளேன்
மீண்டும் சிலுவையில்
உம்மை அறைந்திட்ட பாவி நான்
உம் பிள்ளை என்று சொல்ல
ஒரு தகுதியும் என்னில் இல்லை

திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன் – 2

அப்பா என்று சொல்ல தகுதியில்லை
உம் வேலைக்காரனாய் என்னை சேர்த்துக்கொள்ளுமே (2)
அடிமை மீதும் அன்பு
கூரும் பேரன்பே (2)
திரும்பி வருகிறேன் மனந்திரும்பி வருகிறேன்

உம் வீட்டில் ஒரு மூலையில் இடம் தந்தால் போதும்
உம் இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் தந்தால் போதும் (2)
திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன்

அப்பா வீட்டில் ஆகாரத்தில் பஞ்சமில்லை
நானோ பசியால் வாடுகிறேன் (2)
அடிமையையும் போஷிக்கும் பேரன்பே – 2
திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன்

உம் வீட்டில் ஒரு மூலையில் இடம் தந்தால் போதும்
உம் இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் தந்தால் போதும் (2)
திரும்பி வருகிறேன் மனந்திரும்பி வருகிறேன்

Meendum Paaviyaai
Um Samugathil Vandhullaen
Meendum Siluvaiyil
Ummai Araindhitta Paavi Naan
Um Pillai Endru Solla
Oru Thagudhiyum Ennil Illai

Thirumbi Varugiraen
Manandhirumbi Varugiraen (2)

Appaa Endru Solla Thagudhiyillai
Um Vaelaikaaranaai Ennai Saerthukkollumae (2)
Adimai Meedhum
Anbu Koorum Paeranbae (2)
Thirumbi Varugiraen
Manandhirumbi Varugiraen

Um Veetil Oru Moolaiyil Idam Thandhaal Poadhum
Um Idhayathil Oru Oarathil Idam Thandhaal Poadhum (2)
Thirumbi Varugiraen
Manandhirumbi Varugiraen

Appaa Veetil Aagaarathil Panjamillai
Naanoa Pasiyaal Vaadugiraen (2)
Adimayaiyum Poashikkum Paeranbae – 2
Thirumbi Varugiraen
Manandhirumbi Varugiraen

Um Veetil Oru Moolaiyil Idam Thandhaal Poadhum
Um Idhayathil Oru Oarathil Idam Thandhaal Poadhum (2)
Thirumbi Varugiraen
Manandhirumbi Varugiraen

Balan Jenanamanaar Betheleham Ennum – பாலன் ஜெனனமானார் பெத்தலகேம

Balan Jenanamanaar Betheleham Ennum
பாலன் ஜெனனமானார் பெத்தலகேம
என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம்
அனைவரும் போற்றும் ஜெனனம்

1. கன்னிமேரி மடியினில் கன்னம் குழிய சிரிக்கிறார் சின்ன இயேசு
தம்பிரான்சின்ன பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவை தொழுது மகிழ வாரீர்

2. உன்னதத்தில் மகிமையே புமியில்
சமாதானமே மனுஷர் மேல் பிரியமே

3. மேய்ப்பர் பாடல் கேட்கிறார் முன்னணையை
கிட்டுகிறார் உண்மை செய்தி அறிகிறார்

4. கிழக்கு ராஜ நட்சத்திரம் கணித்து
பார்த்த சாஸ்திரிகள் துணிந்து வந்து பார்க்கிறார்

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Avar Arputhamaanavarae
1. Avar Arputhamaanavarae – 2
Enai Mattennai Kaathennai Thaangukiraar
Avar Arputhamaanavarae

2. Avar Unnathar Entanarae – 2
Vin Sooriya Santhira Natchathirangal
Avar Unnathar Entanarae – Avar

3. Avar Arputhamaanavarae – 2
Avar Singathin Vaayai Kattinaarae
Avar Arputhamaanavarae – Avar

4. Avar Unnathar Entanarae – 2
Avar Kaatarayum Kadalaiyum Athatinaarae
Avar Unnathar Entanarae – Avar

Arpanithane Yennai Muttelumai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

Arpanithane Yennai Muttelumai
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

Aarathkindroam Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை

Aarathkindroam Ummai
ஆராதிக்கின்றோம் உம்மை
ஆராதிக்கின்றோம் – இரட்சகா
தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

மாட்சிமை உள்ளவரே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்குப் பாத்திரரே

என் பெலவீன நேரங்களில்
உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே
ஆத்துமாவை தேற்றினீரே
கிருபை கூர்ந்தவரே

ஊழிய பாதையிலே எனக்கு
உதவின மா தயவே
கெஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே

Azhaitheere Yesuve – அழைத்தீரே ஏசுவே

Azhaitheere Yesuve
அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே
Azhaitheere Yesuvae
Anbotae Ennai Azhaitheere
Aandavar Sevaiyilae Maripaenae
Aayathamaanaen Thaevae

1. En Janam Paavathil Maalkirathae
En Uyir Thanthaen Mannuyirkkae
En Thuyarathoniyo Ithaiyaar Indru Kaetpaaro
En Kaariyamaaga Yaarai Alaipaen
Endreerae Vanthenitho — Alaitheerae

2. Ennathaan Theengu Naan Ilaithaen
Ennai Vittadum En Janamae
Ethanai Nanmaigalo Unakaaga Naan Seythaenallo
Endre Uraithennai Aengi Alaiththeer
Eppadi Naan Marapaen — Alaitheerae

3. Aathi Visvaasam Thangidavae
Aandavar Anbu Pongidavae
Aathi Apposthalarae Upathaesam Alithanarae
Nal Poorana Thiyaaka Paathai Nadanthae
Nandriyudan Ulaipaen — Alaitheerae

4. Enthan Jebathai Kaetdidumae
Aelai Janathai Meetdidumae
Enthan Pitha Sithamae Enthan Pojanamum Athuvae
En Pirananaikkooda Naesithidaamal
Ennaiyum Oppataithaen — Alaitheerae

5. Aadamparangal Maetimaikal
Aasaapaasangal Perukiduthae
Aayiram Aayiramae Naraka Valipokintarae
Aa! Neeraeyallaamal Yaarundu Meetka
Aandavarae Irangum — Alaitheerae

6. Paakkiyamaana Sevaiyithae
Paatham Paninthae Seythiduvaen
Aayul Mutiyum Varai Kiristhaesu Varukai Varai
Anbin Manathaalmai Unnmaiyum Kaathu
Aandavarai Adaivaen — Alaiththeerae