Song Tags: CBC 2018 Songs

Puthuvalvu Yesu Thanthar – புது வாழ்வு இயேசு தந்தார்

Puthuvalvu Yesu Thanthar
புது வாழ்வு இயேசு தந்தார் தையாரே தையர தைய்யா
பழைய பாவம் கடலில் தள்ளினார் தையாரே தையர தைய்யா
நடனமாடி மகிழ்ந்திடுவேன் தையாரே தையர தைய்யா
நன்றியோடு துதித்திடுவேன் தையாரே தையர தைய்யா (2)

பெருமைகள் , கோபங்கள் ஏமாத்து வேலை எல்லாம்
என்னை விட்டு பறந்து போகுதே (2)
அன்பு, அமைதி, உண்மை, பரிசுத்தத்தை
இயேசப்பா தந்து விட்டாரே – எனக்குள்ளே (2)

 

Pudhu Vaazhvu Yesu Thanthaar Thayyaare Thayyara Thayyaa
Pazhaya Paavam Kadalil Thallinaar Thayyaare Thayyara Thayyaa
Nadanamaadi Magizhnthiduven Thayyaare Thayyara Thayyaa
Nandriyodu Thuthithiduven Thayyaare Thayyara Thayyaa (2)

Perumaigal Kobangal Emathu Velai Ellam
Ennai Vittu Paranthu Poguthey (2)
Anbu Amaithi Unmai Parisuthaththai
Yesappaa Thanthu Vittaarey – Enakulley (2)

Vanathil Vattamidum Kaluginai – வானத்திலே வட்டமிடும் கழுகினை

Vanathil Vattamidum Kaluginai
வானத்திலே வட்டமிடும் கழுகினைப் பாரு
தன் செட்டைகளால் குஞ்சுகளை பாதுகாக்குது (2)

அது போல் உன்னையும் என்னையும் இயேசு
பாதுகாப்பாரே பயப்படாதே தம்பி தங்கையே (2)

உன் வழிகளெல்லாம் உன்னை பாதுகாக்க
துதர்களை அனுப்பிடுவாரே (2)

பயப்படாதே தம்பி, தங்கையே – நீயும் (2)

Vaanathiley Vattamidum Kazhuginai Paaru
Than Settaigalaal Kunjugalai Paathukaakuthu (2)

Adhu Pol Unnayum Ennayum Yesu
Paadhukaapaarey Bayapadaathey Thambi Thangaye (2)

Un Vazhigalellam Unnai Paadhukaaka
Thoothargalai Anupiduvaarey (2)

Bayapadaathey Thambi, Thangaye – Neeyum (2)

 

Diyalo Diyalo Diyalo – டியாலோ டியாலோ டியாலோ

Diyalo Diyalo Diyalo
டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (2)
டியாலோ டியாலோ டமுக்கு டப்பா (4)
இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு
அற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ
மரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (2)
உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி

டியாலோ ……

1. எங்களுக்காய் இரத்தம் சிந்தி
மரித்தார் எங்கள் இயேசு சாமி
பாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க
சாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (2)

2. மனுஷராலே தள்ளப்பட்டோம்
மனுஷராலே வெறுக்கப்பட்டோம்
எங்களையும் தேடி வந்தாரே- அந்த
இயேசு சாமி எங்களையும் சேர்த்து கொடண்டாரே (2)

3. ஊர் ஊராய் சுற்றி வருவோம்
ஊர் கதையை பேச மாட்டோம்
இயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க
இயேசுவின் அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம் (2)

Diyalo Diyalo Diyalo Diyalo Diyalo Diyalo (2)
Diyalo Diyalo Damaku Dappa (4)
Yesu Saami Romba Romba Nalla Saamingo Namaku
Arputhangal Eraalamaai Seyyum Saamingo
Marithavarai Uyirodu Ezhuppum Saami (2)
Uyir Ulla Namakum Udhavi Seyyum Nalla Saami

Diyalo..

Engalukkaai Raththam Sindhi
Marithaar Engal Yesu Saami
Paavathai Mannithu Vittaare – Enga
Saabathayum Kooda Neeki Vittaare – Enga (2)

Manusharaaley Thallapattom
Manusharaaley Verukkaattom
Engalayum Thedi Vanthaare Andha
Yesu Saami Engalayum Serthu Kondaarey (2)

Oor Ooraai Suttri Varuvom
Oor Kathayai Pesa Maatom
Yesuvai Patri Solluvom – Naanga
Yesuvin Anbai Patri Eduthu Solluvom (2)

 

Yesapa Naan Unthan – இயேசப்பா நான் உந்தன்

Yesapa Naan Unthan

இயேசப்பா நான் உந்தன் பிள்ளையாய் மாற
கிருபைகள் தந்திடுமே (2)
உந்தன் இரத்தத்தால் என்னை கழுவி
முற்றிலும் தூய்மையாக்கிடுமே
உந்தனின் வசனத்தாலே நாள்தோறும்
என்னை நடத்துமே
வாழ்நாளெல்லாம் உம் சித்தம் போல் வாழ
கிருபைகள் தந்திடுமே – ஆமென்

Yesappaa Nan Unthan Pillayaai Maara
Kirubaigal Thanthidumey (2)
Undhan Raththathaal Ennai Kazhuvi
Muttrilum Thooymayaakidumey
Undhanin Vasanathinaaley Naalthorum
Ennai Nadathumey
Vazhnaalelaam Um Siththam Pol Vaazha
Kirubaigal Thanthidumey – Amen

Melae Vanathil Parakum – மேலே வானத்தில் பறக்கும்

Melae Vanathil Parakum
மேலே வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி
ஒன்றுக்கும் கவலை படல
அந்த மரத்திலே இருக்கும் சிட்டுக்குருவி
ஒன்றுக்கும் கவலை படல
அதுக்குத்தான் நன்றாகத் தெரியுமே
இயேசு அதை காண்கின்றார் (2)
அதன் தேவைகளை சந்திக்கின்றார்- 2

துன்பத்திலே வாடும் தம்பி, தங்கச்சி
ஒன்றுக்கும் கவலை படாதே
உதவி செய்வார் யாருமில்லையே
என்று நீயும் கவலை படாதே
உனக்கொன்னு தெரியுமா? தம்பி, தங்கச்சி
இயேசு நம்மை காண்கின்றார்(2)
நம் தேவைகளை சந்திக்கின்றார் – 2

Meley Vaanathil Parakkum Pattaampoochi
Ondrukkum Kavalai Padala
Andha Marathiley Irukum Sittukuruvi
Ondrukkum Kavalai Padala
Adhukuthaan Nandraaga Theriyume
Yesu Adhai Kaangindraar (2)
Adhan Thevaigalai Sandhikindraar (2)

Thunbathiley Vaadum Thambi Thangachi
Ondrukkum Kavalai Padaathey
Udhavi Seivaar Yaarumillaye
Endru Neethum Kavalai Padaathey
Unakonnu Theriyumaa Thambi Thangachi
Yesu Nammai Kaangindraar (2)
Nam Thevaigalai Santhikindraar (2)

Maram Vitu Maram Thavum – மரம் விட்டு மரம் தாவும்

Maram Vitu Maram Thavum
மரம் விட்டு மரம் தாவும் அம்மா குரங்கு
அதை கெட்டியாக பிடிச்சிருக்கு குட்டி குரங்கு
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது
குதித்து குதித்து வேகமாக ஓடும் கங்காரு
அதின் பைக்குள்ளே தான் இருக்குதே குட்டி கங்காரு
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது
அன்பு தம்பி, தங்கையே- உன்னை
அழகாய் தேவன் படைத்தார் (2)
அவரை நீயும் பிடித்துக் கொண்டால்
அஞ்சிடாமல் வாழ்ந்திடலாம் – 2

Maram Vittu Maram Thaavum Amma Kurangu
Adhai Kettiyaaga Pidichuruku Kutty Kurangu
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu

Kuthithu Kuthithu Vegamaaga Odum Kangaaru
Adhin Paikullaye Than Irukuthey Kutty Kangaaru
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu

Anbu Thambi Thangayye – Unnai
Azhagaai Devan Padaithaar (2)
Avarai Neeyum Pidithukondaal
Anjidaamal Vazhnthidalaam (2)

Payapadathey Naan Unnodu Irukiren – பயப்படாதே நான் உன்னோடு

Payapadathey Naan Unnodu Irukiren
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்
கலங்கிடாதே நான் உன்னை பாதுகாப்பேன்
திகையாதே நான் உன்னை கரம்பிடித்திடுவேன்
பதறாதே பதறாதே என்று கர்த்தர் சொல்கிறார்

1. உன் வாழ்வில் அதிசயம் காணச் செய்வார் இயேசு
அனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு
புதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)

2. தாயின் கருவில் தெரிந்து கொண்டவர் இயேசு
தாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு
ஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)

Bayapadaathey Naan Unnodu Irukiren
Kalangidaathey Naan Unnai Paadhukaappen
Thigayaathey Naan Unnai Karampidithiduven
Patharaathey Patharaathey Endru Karthar Solrgiraar

Un Vaazhvil Adhisayam Kaana Seivaar Yesu
Anuthinamum Nadathi Solvaar Yesu
Pudhuvaazhvai Thandhiduvaar Vetri Unaku Thandhiduvaar
Patharaathey Patharaathey – Neeyum (2)

Thaayin Karuvil Therinthu Kondavar Yesu
Thazhvil Unnai Uyarthiduvaar Yesu
Gnanam Unaku Thanthiduvaar Nithiya Vazhvai Thanthiduvaar
Patharaathey Patharaathey – Neeyum (2)

Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான்

Ready Ready Ready Than
வரவேற்புப் பாடல்

ரெடி ரெடி ரெடிதான்
C.B.S ரெடிதான்
ரெடி ரெடி ரெடியா?
நீயும் வர ரெடியா?
அடடா (2) கொண்டாட்டம்தான்
வாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)

ஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்
Happy happy (3) எங்களுக்குத்தான்

கவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்
குழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்
இயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்
பாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்