Song Tags: CJC Life Tamil Church Songs

Thai Pola Thetrum En Nesarae – தாய் போல தேற்றும் என் நேசரே

Thai Pola Thetrum En Nesarae

தாய் போல தேற்றும் என் நேசரே
தாய் போல அணைக்கும் ஆதரவே

நான் பாடி துதிப்பேன் அல்லேலூயா
என் நேசர் அன்பில் மகிழ்ந்திடுவேன்
உம் அன்பிற்கு இணை இல்லையே
நான் என்றென்றும் உந்தன் பிள்ளையே – (3)

1. என் தாயின் கருவில் என்னை, முன்னே தெரிந்து கொண்டீர் ஐயா
என் பிறந்த நாள் முதலாக, என்னைக் காத்து வந்தீர் ஐயா
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
கண்ணின் மணி போல பாதுகாத்தீரே – நான் பாடி

2.என் தாய் தந்தை மறந்தாலும், நான் மறவேன் என்று சொன்னீர்
என் உற்றார் நண்பர் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன் என்றீர்
உள்ளங் கைகளில் வரைந்தேன் என்றீரே
வாழ்நாள் முழுதும் என்னோடு இருப்பீரே – நான் பாடி

Desamae Nee Payapadathey – தேசமே நீ பயப்படாதே

Desamae Nee Payapadathey

தேசமே நீ பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
தேசமே நீ கலங்காதே,
கர்த்தர் என்றும் உன் நடுவில்

பயப்படாதே, கலங்கிடாதே
இயேசு என்றும் உன்னுடனே,
திகையாதே, சோராதே
அவர் கரம் என்றும் நம்முடனே

1. எளியவனை அவர் கைவிடார்
சிறியவனை அவர் தள்ளிடார் – உன்
சிறையிருப்பை அவர் மாற்றுவார்
சிங்காரம் தந்திடுவார்

2. துன்பமோ நாசமோசமோ
வியாகுலமோ உபத்திரவமோ
கிறிஸ்துவின் அன்பை பிரித்திடாதே
இன்றே நீ எழுந்து வா

3.இயேசுவின் ரத்தம் நம்மேலே
தீங்கு நம்மை தொடராதே
ஆவியானவர் நமக்குள்ளே – இன்று
கட்டுகள் உடைந்த்திடுதே

Karthar En Meiparai Irukindrer – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Karthar En Meiparai Irukindrer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை

எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்

மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே

பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Nesare En Nesare – நேசரே என் நேசரே

Nesare En Nesare
நேசரே என் நேசரே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
என் நேசமே என் பாசமே
என் அன்பரே என் இன்பரே!
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!

அன்னையே என் தந்தையே
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
உந்தன் அன்பின் ஆழம் என்ன
அகலம், நீளம் என்ன
உயரம் என்ன வென்று அறியேனே!
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!

துணையாளரே மணவாளரே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
உள்ளங்கையில் என்னை வரைந்துவைத்து தினம் ரசிக்கும்
அன்பு என்ன புரியலையே
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று சொல்லும்

அன்பு ஒன்றும் புரியலையே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்

Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை

Appa Ennai Nesikirer Alavu Illai

அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே

En Nesar Manavaalaar Ivarae

என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒரு போதும் கைவிடாமல்
எப்போதும் மறவாதவர் அதனால்.. அதனால்…

உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன்
உறவாய் வந்தீர் உயிராய் வந்தீர்…

அன்னை இவரே தந்தை இவரே
உற்றார் இவரே எனக்கெல்லாம் இவரே

வழியும் இவரே ஒளியும் இவரே
ஐீவன் இவரே சத்தியம் இவரே

Rajathi Rajan Magimaiyodu – இராஜாதி இராஜன்  மகிமையோடே

Rajathi Rajan Magimaiyodu

இராஜாதி இராஜன்  மகிமையோடே
வான மேகத்தில் எழுந்தருள்வார்!

எக்காள சத்த தொனி கேட்கிறதே
ஆட்டு குட்டியின் கல்யாண நாளிது!

பதினாயிரம் பரிசுத்தர்கள் சூழ
எழுந்து நீதி செய்குவார்

எந்தன் நேசர் தம் கரம் அசைத்தே
அன்பாய் என்னையும் அழைத்து செல்வார்

சுத்த பிரகாச ஆடையுடனே பரிசுத்தர்கள்
உம்மை பணிந்து கொள்வார்

கண்ணீருமில்லை கவலையில்லை
இயேசு ராஜாவே நம் சொந்தமானார்