Song Tags: Jebathotta Jeyageethangal Volume 38

Jebathotta Jeyageethangal Volume 38

Nallavar Neer Thane – நல்லவர் நீர்தானே

Nallavar Neer Thane
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்