Song Tags: Jino Kunnumpurath Song lyrics

Naan Ummai Nooki Kangalai – நான் உம்மை நோக்கி கண்களை

Naan Ummai Nooki Kangalai
(நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்) x 2
வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்
பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை
சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்
ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.

1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்
ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2
(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2
(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்) x 2
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.

2. (தண்ணீரின் மீதே நீர் நடந்தீர்
என்னையும் நீரே வழிநடத்தும்) x 2
(உம் நிறைவில் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2
(தேவனே உம்மோடு கூட வாழ்வேன்) x 2
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.
வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்.
பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை.
சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்
ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்.
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்.
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்