Velaiyaerapetra Um Irathathal
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர் – 2
திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே – 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே – 2
தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2