Song Tags: Justin Samuel Song Lyrics

Ummai Sutri Sutri – சுற்றி சுற்றி

Ummai Sutri Sutri
உம்மை சுற்றி சுற்றி வந்தால் எனக்கு கிருபை கிடைக்குமே
உம்மை தொட்டு தொட்டு பார்த்தால்
எனக்கு சுகம் கிடைக்குமே

நீர்தானே எனக்கு நல்ல கர்த்தர்
நீர்தானே எனக்கு நல்ல மேய்ப்பர்

1. எதையெல்லாமோ சுற்றி வந்தேன் அறியாமையால்
எதையெல்லாமோ செய்தேன் ஒன்றும் புரியாததால்
கிருபையாக என்மீது அன்பு கூர்ந்து
உம்மை சுற்றிவர செய்தீரே நன்றி ஐயா .
(நீர்தானே எனக்கு ..)

2. ஊர் ஊராய் சுற்றி வந்தேன் உம்மைத்தேடி
நேர்த்திக் கடன் செலுத்தினேன் ஓடோடி
எதுவுமே தேவையில்லை என்று சொல்லி
என்னை தேடி வந்த தெய்வமே நன்றி ஐயா
(நீர்தானே எனக்கு ..)

3. எப்போதும் என்னை சுற்றி இருக்கின்றீர்
ஒருபோதும் என்னை விட்டு விலக மாட்டீர்
எனக்குள்ளே நீர் வந்து தங்கியதால்
என்னை ஆலயமாக்கிவிட்டீர் நன்றி

Karthaave Neer Maatchimai – கர்த்தாவே நீர் மாட்சிமை

Karthaavey Neer Maatchimai
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்
உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர்
நீர் எந்தன் அடைக்கலம்
நீரே என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணும் நீர்
நீரே என் நம்பிக்கையே

1. நெருக்கடி வேளையில்
உமை அழைத்தேன்
ஓடி வந்து எனக்குதவி செய்தீர்
சோதனை நேரம் சூளும்போது
என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….)

2. இம்மட்டும் காத்து நடத்தினீர
இனிமேலும் காத்து நடத்துவீர்
எத்தனை இடர்கள் வந்தாலும்
உம்மை நான் நம்புவேன் (நீர் எந்தன் ….)

3. மரண அலைகள் சூழ்ந்தாலும்
சூழ்நிலை பயத்தை கொடுத்தாலும்
என் ஜீவன் உந்தன் கையில்தானே
மரித்தாலும் நான் பிழைப்பேன் (நீர் எந்தன் ….)

Karthaavey Neer Maatchimai Nirainthavar
Unnatharae Neer Uyirudan Ezunthavar

Neer Enthan Adaikalam
Neerae En Kottai
Aabathukaalathil Aranum Neer
Neerae En Nambikkaiyae

1. Nerukkadi Vezlaiyil umai Azaithene
Odi Vanthenakkuthavi Seitheer
Sothani Neram Soozlumbothu
En Karangalai Patrikkondeer ( Neer Enthan …)

2. Immattum Kaathu Nadathineer
Inimelum Kaathu Nadathuveer
Ethanai Idargal Vanthaalum
Ummai Naan Nambuvene ( Neer Enthan …)

3. Marana Alaigal Soozlnthaalum
Soozlnilai Payathai Koduthaalum
En Jeevan Unthan Kaiyilthaaney
Marithaalum Naan Pizlaippene ( Neer Enthan …)

 

Kalangidum Nerangalil – கலங்கிடும் நேரங்களில்

Kalangidum Nerangalil
கலங்கிடும் நேரங்களில்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே

காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்

1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ

வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?

நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே

3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்

இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே

Thadumarum Nerangalil – தடுமாறும் நேரங்களில்

Thadumarum Nerangalil
தடுமாறும் நேரங்களில்
தாங்கியே நடத்திடுவார்
தள்ளாடும் நேரத்திலும்
தயவோடு நடத்திச்செல்வார்
இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்
இயேசு பெரியவர், இயேசு மேலானவர்

1. சோதனைகள் வந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்
சாத்தானின் கூட்டம்
என்னை சூழ்ந்திட்டாலும்
எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டு
எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
(இயேசு நல்லவர் …)

2. கோரப்புயல் வீசினாலும்
படகினைக் கவிழ்த்தாலும்
ஆழியிலே ஜலம் பொங்கினாலும்
அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடு
அடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்
(இயேசு நல்லவர் …)

3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடு
கலக்கமுமில்லை பயமில்லையே
(இயேசு நல்லவர் …)

Aaviyanavare Paraloga Pidhavae – ஆவியானவரே பரலோகப்பிதாவே

Aaviyanavare Paraloga Pidhavae

ஆவியானவரே, பரலோகப்பிதாவே,
எந்தன் அன்பு நேசரே உம்மை ஆராதிப்பேன்

ஆராதனை(2) ஆவியிலே உமக்கு ஆராதனை
ஆராதனை(2) உண்மையிலே உமக்கு ஆராதனை (2)

1. என்னை அழைத்தவர் நீரே, என்னை நடத்திச் செல்வீரே (உம்) அன்பின் ஆவியால் தினம் நிரப்புகின்றீரே
(ஆராதனை ….)

2. பெலவீன நேரங்களில் என் பெலனாய் வந்தீரே
சுகவீன நேரங்களில் என் சுகமாய் மாறினீரே
(ஆராதனை ….)

3. சோர்ந்திடும் நேரமெல்லாம் என்னை தூக்கி சுமந்தீரே
தடுமாறும் நேரங்களில் என்னை தாங்கிக்கொண்டீரே
(ஆராதனை ….)

4. என் கன்மலையும் நீரே, என் கோட்டையும் நீரே உயர்ந்த அடைக்கலமும், நான் நம்பும் கேடகமும் நீரே
(ஆராதனை ….)

En Ovvoru Sottu Kanneerukkum – என் ஒவ்வொரு சொட்டு

En Ovvoru Sottu Kanneerukkum

என் ஒவ்வொரு சொட்டு
கண்ணீருக்கும் பதிலுண்டு
அதை பெற்று, பெற்று
அனுபவிக்க பெலனுண்டு
நான் திடன் கொள்வேன்,
நான் பெலன் கொள்வேன்
என் புலம்பலை ஆனந்த
களிப்பாய் மாற்றிடுவார்

1. கண்ணீரின் பாதையில்
நடக்கும்போதெல்லாம்
என் கண்ணீரைக் காண்பாரோ
என்று யோசித்தேன்
ஆனால் உள்ளங்கையில் என்னை
வரைந்து வைத்துள்ள கர்த்தர்
உன் கண்ணீரை காண்கிறேன்
என்று சொன்னாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

2. சோதனையில் சோர்ந்து போய்
அமிழ்ந்து போகையில்
எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்
ஆனால் அமிழ்ந்த பேதுரு கரம்
பிடித்து தூக்கின கர்த்தர்
என்னையும் தம் கரம் பிடித்து
தூக்கி விட்டாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

3. தீமையான காரியங்கள்
சூழ்ந்து கொள்கையில்
தேவன் என்னை மறந்தாரோ
என்று யோசித்தேன்
ஆனால் யோசேப்பை ராஜாவாக
மாற்றின கர்த்தர்
எல்லா தீமைகளையும்
நன்மையாக முடியச்செய்தாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

Abishekium Ennai Anal Mootum – அபிஷேகியும் என்னை அனல்

Abishekium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும்
ஆவியினால் என்னை நிரப்பிவிடும்
ஆர்ப்பரித்து துதித்திட
வல்லமையால் நிரம்பிட
அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே

1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட
யெசபேலின் ஆவிகள் கட்டப்பட
எதிரியின் சேனையை கலக்கிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே
சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே
இயேசுவின் நாமம் மகிமைப்பட
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே
சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே
அப்போஸ்தலர் ஆதி நிலை ஏகிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

Naan Jeikka Piranthavan – நான் ஜெயிக்க பிறந்தவன்

Naan Jeikka Piranthavan
நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன்
ஆசீர்வாத வாய்க்கால்தான்
என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார்

1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய
அழைக்கப்பட்ட மனிதன் நான்
தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை
உலகமெங்கும் வீசச்செய்வேன்

2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்
உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன்
கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்

3. எனக்கு எதிராய் பதினாயிரம் பேர்
பாளயமிறங்கி வந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்பட மாட்டேன்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவேன்

4. கர்த்தரின் வேதத்தில் எப்போதுமே
தியானமாக இருப்பதனால்
இலட்சம்பேருக்கு என்னை அவர்
ஆசீர்வாதமாய் மாற்றிடுவார்

Um Vaarthaigal Melaanathu – உம் வார்த்தைகள் மேலானது

Um Vaarthaigal Melaanathu
உம் வார்த்தைகள் மேலானது
உம் வல்லமை மேலானது
உம் திரு இரத்தம் மேலானது
உம் சமூகமே மேலானது
உம் வார்த்தைகள் மேலானது
உம் வல்லமை மேலானது
அல்லேலூயா (8)

Um Vaarthaigal Melaanathu
Um Vallamai Melaanathu
Um Thiru Ratham Melaanathu
Um Samoogame Melaanathu
Um Vaarthaigal Melaanathu
Um Vallamai Melaanathu
Hallelujah (8)

Ilavasamaai Kirubayinaal – இலவசமாய் கிருபையினால்

Ilavasamaai Kirubayinaal
இலவசமாய் கிருபையினால்
என்னை நீதிமானாக்கினீரே
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
அப்பா உம் கிருபைதானே
நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா

1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
தேடி வந்தீரய்யா
ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
ஒருநாள் அறிவை தந்தீரய்யா
கீழானதையல்ல மேலானதை நாடு
என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)

2. பாவத்தின் கறைகளால் நிறைந்த
இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா
பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்
பெலனை தந்தீரய்யா
காண்கின்ற உலகமல்ல காணாத
பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா
(நன்றி(2) ஐயா…)

3. என் சுயநீதியெல்லாம் அழுக்கான
கந்தை உணர செய்தீரய்யா
அழுக்கு உடை அகற்றி அழகான
வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
காத்திடு என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)

Ilavasamaai Kirubayinaal
Ennai Neethimaanaakineerae
Nirmoolamaagaamal Immattum Kaathathu
Appa Um Kirubaithane
Nantri, Nantri Iyya
Kodi Nantri Iyya

1. Ulagathin Pinney Odikondirunthene
Thedi Vantheeraiyya
Aasthium Aiswaryamum Azinthidum Orunalz
Arivai Thantheeraiyya
Keelzaanathaiyalla Melaanathai Naadu
Entru Sonneeraiyya
(Nantri…)

2. Paavathin Karaigalaal Niraintha Ivvulagil
Parisutham Thantheeraiyya
Paavathai Ethirkka Ovvoru Naalum
Belanai Thantheeraiyya
Kaangintra Ulagamalla
Kaanaatha Paralogamthaan
Unakku Enteeraiyya
(Nantri…)

3. En Suya Neethiyellam Azukkaana Kanthai
Unara Seitheeraiyya
Azukku Udai Agatri Alagaana Vennaadai
Enakku Thandeeraiyya
Maanathai Kaathidum Un Vastram
Kaathidu Entru Sonneeraiyya
(Nantri…)

2. Ulagamellam Verum Maayaithaaney
Azikintra Kuppaithaaney
Mananthirumbi Marubadium Piravaavittaal
Un Magimaiyaai Izanthiduvaai
(Sinthipaayaa …)

3. Satru Neram Unnai Oppukodu
Unmai Devanai Thedidavey
Utthama Idayathaal Thedumbothu
Avarai Nee Kandadaivaai
(Sinthipaayaa …)