Song Tags: Justin Samuel Song Lyrics

Unga Prasannathil Naan Nirgaiyile – உங்க பிரசன்னத்தில்

Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே
உம் மகிமை என்னை மூடுதே
உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே
எந்தன் கண்கள் கலங்கிடுதே

என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே
ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே
என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே
என் பிரியமும் நீரே இயேசையா

1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும்
பாயும் யோர்தானும் பின்திரும்பிடும்
உந்தன் பிரசன்னத்தில், (பெரும்)
பர்வதமும் மெழுகாக உருகிடுதே
(என் ஆவி, ஆத்மா…)

2. கடும்புயல்போல கஷ்டம் வந்தாலும்
பெருங்காற்றினால் அடிபட்டாலும்
உந்தன் பிரசன்னத்தில், வரும் வார்த்தை ஒன்றே
என்னை தேற்றிடும், அது போதுமே
(என் ஆவி, ஆத்மா…)

3. பெலனில்லாத நேரத்திலும்
சுகமில்லாத சமயத்திலும்
உந்தன் பிரசன்னத்தில், எல்லா பெலவீனம்
இல்லாமல் மறைந்திடுதே
(என் ஆவி, ஆத்மா…)

Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்

Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1. பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

Raja Neer Seitha Nanmaigalai – இராஜா நீர் செய்த நன்மைகளை

Raja Neer Seitha Nanmaigalai
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்

நீர் நல்லவரே, சர்வ வல்லவரே,
என்றென்றும் பெரியவரே
அல்லேலூயா (8)

1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
அல்லேலூயா (8)

2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன்
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
அல்லேலூயா (8)

3. திக்கற்று அறியாமல் திகைத்தபோது
கரம் பிடித்து நடத்தியதால் துதித்திடுவேன்
பாதைக்கு தீபமாக வந்தவரே
பணிவுடன் தொழுதிடுவேன்
அல்லேலூயா (8)

Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Neengaatha Perinbame – நீங்காத பேரின்பமே

Neengaatha Perinbame

நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா

1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே

2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ

3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Nantri Solven Naan – நன்றி சொல்வேன் நான்

Nantri Solven Naan
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
எந்தன் இயேசுவே நான் உமக்கு நன்றி சொல்வேன்

நன்றி ராஜா எந்தன் இயேசு ராஜா (8)

1. இரட்சகரே உமக்கு நன்றி சொல்வேன்
என்னை இரட்சித்தீரே உமக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)

2. ராஜாதி ராஜனுக்கு நன்றி சொல்வேன்
எங்கள் தேவாதி தேவனுக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)

3. வரங்களை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
வல்லமை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Maatridum Ennai Maatridum – மாற்றிடும் என்னை மாற்றிடும்

Maatridum Ennai Maatridum
மாற்றிடும் என்னை மாற்றிடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

1. என்னை நானே இது வரை ஆளுகை செய்தது போதுமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவும் உமக்கு சொந்தமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவையும் நீரே ஆளுமையா

ஆட்கொள்ளும் என்னை ஆட்கொள்ளும்
உமக்கு உகந்த பாத்திரமாக

2. கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்திடுவேன்
உம் மகிமைக்குரிய பாத்திரமாக என்னை வனைந்திடுமே

வனைந்திடும் என்னை வனைந்திடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

3. உம்மாலன்றி என்னால் எதுவும் செய்ய முடியாதையா
உம் வல்லமை வரங்கள் தந்து என்னை பயன்படுத்துமையா

பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உமக்கு உகந்த பாத்திரமாக
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Enakkaga Yavaiyum Seithu Mudippar – எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

Enakkaga Yavaiyum Seithu Mudippar
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்

பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்

1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்

2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்

3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்

Lyrics and Sung by : Dr. S. Justin Samuel