Unnmaiyaai Thammai Nooki
உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்
பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்
1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே
– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்
2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்
– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்
3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்
– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்
பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்