Song Tags: Nesipaya vol 2

Siluvaiyo Anbin Sigaram – சிலுவையோ அன்பின்

Siluvaiyo Anbin Sigaram
சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
எண்ணி என்ன சொல்லிடுவேன்

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்