Song Tags: Puthiya Anubavam Vol 3 Songs Lyrics

Mayaiyana Intha Ulaginile – மாயையான இந்த உலகினிலே

Mayaiyana Intha Ulaginile
மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னைத் தேடி வந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
நிலையில்லாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கினீரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
எங்கே செல்வேன்

தேனிலும் இனிமையானவரே
பாடலில் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே நாங்கள் பாடவே

எளிமையான எந்தன் வாழ்வினிலே
மகிமையைத் தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செம்மையான வழியில் நடத்துகிறீர்
உம்மைவிட்டு நானும் எங்கே
செல்வேன் செல்வேன்
நீர் இல்லா வாழ்க்கை
வாழ்க்கையே இல்லை
அங்கும் இங்கும் அலைந்தபோதும்
நிம்மதி இல்ல
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே