Song Tags: Stephen Sanders Song Lyrics

Thaguthiyilla Ennai Yeduthu – தகுதியில்லா என்னை எடுத்து – Unga Sathan Ketka

Unga Sathan Ketka
Thaguthiyilla Ennai Yeduthu
தகுதியில்லா என்னை எடுத்து
கனமாம் உம் ஊழியம் தந்து
இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2)

சோர்ந்துப்போன நேரங்களெல்லாம்
தகப்பனைப்போல் சுமந்து வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளெல்லாம்
தாயைப்போல தேற்றி வந்தீர்

உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய
என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)
ஆட்கொள்ளுமே என் இயேசுவே

மனம் சோர்ந்து நின்ற நேரம்
மனம் தளரா வாழ்வு தந்து
மகிமையின் அனுபவம் கொடுத்து
மலரச்செய்தீர் என்னையே

மனதுருகும் கர்த்தர் நீர்தான்
என்று அறியச்செய்தீரே
மன்னிக்கும் தெய்வம் நீரே
மனம் இறங்கி மீட்டீரே – உங்க சத்தம்

நீர் விரும்பும் ஆதி அன்பில்
மீண்டும் நான் வந்து நிற்க
உம் சித்தம் செய்திட
என்றும் உமக்காய் வாழ்ந்திட

உம் அன்பு ஒன்றே
போதும் எனக்கு என்றுமே
தேவை எனக்கு இன்றே

உந்தன் சமுகம் மட்டுமே – உங்க சத்தம்

துன்பம் நிறைந்த இந்த உலகில்
உம்மையன்றி ஆறுதல் இல்லை
உம்மோடு வாழ்ந்திடவே நான் துடிக்கிறேன்

என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்கக்கூடாதே
என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்க முடியாதே – உங்க சத்தம்

எவ்வளவு ஓடினாலும் எத்தனையோ சாதித்தாலும்
என்ன பயனுண்டு உங்க சித்தமில்லாமல்
நீர் சொல்லி ஓடிடவே

ஓடும் ஓட்டம் முடித்திடவே
என்று நீர் வருவீர் என்ற
ஆவல் இன்னும் பெருகிடவே – உங்க சத்தம்

Thaguyillaa ennai eduthu
Ganamaam um oozhiyam thandhu
Idhuvarai karampidithu nadathi vandheer (2)

Soarndhupoana naerangalellaam
Thagappanaippoal sumandhu vandheer

Kalangi nindra vaelaigalellaam
Thaayaipoala thaetri vandheer

Unga satham kaetka unga sitham seiya
Ennai tharugiraen muzhuvadhum tharugiraen (2)

Aatkollumae en Yaesuvae

Manam soarndhu nindra naeram
Manam thalaraa vaazhvu thandhu
Magimaiyin anubavam koduthu
Malara seidheer ennaiyae
Manadhurugum Karthar neerdhaan

Endru ariya seidheerae
Mannikkum Dheivam neerae
Manam irangi meeteerae – Unga satham

Neer virumbum aadhi anbil
Meendum naan vandhu nirkka
Um sitham seidhida
Endrum umakkaai vaazhndhida
Um anbu ondrae
Poadhum enakku endrumae
Thaevai enakku indrae

Undhan samugam matumae – Unga satham

Thunbam niraindha indha ulagil
Ummaiyandri aarudhal illai
Ummoadu vaazhndhidavae Naan thudikkiraen
Enna naan izhandhitaalum

Ummai izhakkakkoodaadhae
Enna naan izhandhitaalum
Ummai izhakka mudiyaadhae – Unga satham

Evvalavu oadinaalum Ethanaiyoa saadhithaalum
Enna payanundu Unga sithamillaamal

Neer solli oadidavae
Oadum oatam mudithidavae
Endru neer varuveer endra

Aaval innum perugidavae – Unga satham