Song Tags: Tamil Prayer Song

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்