Song Tags: Vibin Balan Song Lyrics

Um Kirubaikkaagavae – உம் கிருபைக்காகவே கெஞ்சி

Um Kirubaikkaagavae

உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2

வாழ வைங்கப்பா-2
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலே
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2
-உம் கிருபைக்காகவே

Enna Seiyya Virumbukintreer – என்ன செய்ய விரும்புகின்றீர்

Enna Seiyya Virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்

1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை

2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்

3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

Unga Mahimai – உங்க மகிமை

Unga Mahimai
உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே

என்னை மீண்டும் நினைத்தருளும்

பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே
விட்டதையும் நான் இழந்ததையும்
திரும்ப தந்திடுமே

முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடுமே
இரட்டிப்பான வல்லமையால்
நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே

Unga magimai magimai magimai
Ennai nirappi moodanumae
Adhai Bhadhikira kaariyangalai naan thukki yeriyanumae
Yesuvae thagapanae
En Yesuvae thagapanae
Ennai meendum ninaitharulum

Pidha thandha magimayai enakku thandheenga
Ennudaya madhiyeenathal izhandhu vitaenae
Vittadhayum naan izhandhadhayum
Vittadhayum naan izhandhadhayum
Thirumba thandhidumae
Enakku thirumba thandhidumae

Mundhina magimayin menmai paarkilum
Adhigamai magimayaal ennai nirapidum
Akkiniyai ennai maatridumae
Akkiniyai ennai maatridumae
Rettipana vallamayal nirapidumae
Ennai rettipana abishaegathal nirapidumae