All Songs by Alwin Thomas

Ellam Kudume Ellam Kudume – எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே

Ellam Kudume Ellam Kudume
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2

மழை வந்தாலும் பயமில்லை
அலை வந்தாலும் பயமில்லை
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)

1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம்

2. தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது – எல்லாம்

Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா

Ootrungayya Ootrungayya
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய

உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ

வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ

ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ

Varum Ayya Pothagare – வாரும் ஐயா போதகரே

Varum Ayya Pothagare
1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்