Song Tags: Alwin Thomas Songs

Singasanathilae Endrum Veetrirukkira – சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற

Singasanathilae Endrum Veetrirukkira
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)

நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
என் சூழ்நிலைகள் மாறுகின்றதே

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)

1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன்
ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன்
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)

2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (6)

Singasanathilae Endrum Veetrirukkira
Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)

Neer Ariyanaiyil Veetriruppathal
Naan Asaikkappaduvathillaiyae
Neer Arasalum Deivamanathal
En Soozhnilaigal Maruginrathae

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)

1. Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Siluvaiyil Um Anbinai Kandaen
Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Um Siluvaiyil Perum Anbinai Kandaen
Um Thooya Raththathinal Kazhuvineer
Ennai Uyarntha Sthanangalil Yetrineer
Um Pillai Naan Enbathai Unarnthen
Um Anbin Azhangalail Tholainthen

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)

2. Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Um Magimai Kandathalae Ezhumbuven
Umakkaga vaazhave Naan Virumbuven
Ini Yesuvukkagavae Vazhuven
En Jeevakalamellam Paaduven

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (6)

Ezhumbi Vaa Nee – எழும்பி வா நீ

Ezhumbi Vaa Nee
எழும்பி வா நீ
என் பிரியமே என் ரூபவதியே

சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்

1. உடைந்து போன கனவால் உந்தன்
வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?

பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்

2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?

சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்

Ezhumbi Vaa Nee
En Priyamae en Roobavathiye

Sambalai Singaaramaaki
pulambalai Aanandhamaakkuvean

1. Udainthu pona kanavaal unthan
vazhkkaiye kasakkutho? (Kasanthatho?)
Vizhnthupona tharunangal ninaiththu
nambikkai Izhanthaayo?

Paruvangal Maatruvean
Unnai Nerththiyai Kaatuvean
kani tharum virutchamaai
unnai viruththiyaakkuvaen

2. Siragai izhantha kazhugaipola
Un manam Kalangutho?
sitharipona silarai Ninaiththu
sithainthu nee ponayoo?

Sirumai poruththaal
puthu sirakugal paarppai
siragai viriththaal
perum sigarangal Kaanbaai

Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Puthiya Naalukkul Ennai Nadathum

புதிய நாளுக்குள்(ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்

Puthiya Naalukkul(Andukul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai Nirapum
Puthu Kirubai Thaarum Devaa
Puthu Belanai Thaarum Devaa

Aarampam Arpamaanaalum
Mudivu Sampoornamaam
Kuraivukal Niraivaakattum – Ellaam
Varatchi Selippaakattum – En

Vetkathirku Pathilaaka
(Iratchippu) Nanmai Thaarum Devaa
Kanneeruku Pathilaaka – Enthan
Kalipai Thaarum Devaa – Aanantha

Savaalkal Santhithida
(Indru) Ulakathil Jeyamedukka
Uravukal Seerporuntha – Kudumpa
Samaathaanam Naan Pettida – Manathil

Nandri Baligal Seluthiye Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiye Naangal
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்

1. உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்

Oruvaraai Periya Athisayam – ஒருவராய் பெரிய அதிசயம்

Oruvaraai Periya Athisayam
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா (2)

இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே (2)
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே (2)

அல்லேலூயா….அல்லேலூயா (4)

தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா (2) (… இந்த நாளில்)

I Am The Lord That Healeth Thee
I Am The Lord Your Healer
I Sent My Word And I Healed Your Disease
I Am The Lord Your Healer;

என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்;
நானே உந்தன் பரிகாரி

இயேசு .. ஓ.. இயேசு (4)
உன் சமூகம் சுகமே

Jesus.. O.. Jesus (4)
Your Presence Makes Me Whole
Then Sings My Soul
My Savior Unto Thee

How Great Thou Lord-2
Then Sings My Soul
My Savior Unto Thee
How Great Thou Lord (2)
How Great Thou Lord (2)

Oruvaraai Periya Athisayam
Seibavar Neer Thaane Yesaiyyaa (2)

Indha Naalil Seiyyume
Irangi Vanthu Seiyyume (2)
Oru Arputham Naangal
Kaanach Cheyyume (2)

Halleluyaa.. Halleluyaa (4)

Thazhumbugalaal Sugamaakkuven
Endravar Neer Thaane Yesaiyyaa (2) (… Indha Naalil)

En Vaarthaiyaal Sugamaakkiduven
Naane Undhan Parikaari

Yesu.. O Yesu (4)
Un Samoogam Sugame

Ellam Kudume Ellam Kudume – எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே

Ellam Kudume Ellam Kudume
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2

மழை வந்தாலும் பயமில்லை
அலை வந்தாலும் பயமில்லை
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)

1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம்

2. தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது – எல்லாம்

Alangara Vasalale – அலங்கார வாசலாலே

Alangara Vasalale
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika